பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு உலக விழிப்புணர்வு பேரணி,துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்…
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு உலக விழிப்புணர்வு பேரணி,துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்…
நவம்பர் 25 தேதி உலக பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாளாக நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.பெண்கள் மீதான வன்முறைகள் மற்றும் அனைத்து பாகுபாடுகளையும் ஒழிக்கும் விதமாக சமூக நலத்துறை,தன்னார்வலர்கள் மற்றும் கற்பகம் கல்லூரி மாணவிகள் இணைந்து பேரணியை தொடங்கினர்.
கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கொடியசைத்து துவக்கி வைத்த பேரணியில் 300 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு கையில்
பதாகை ஏந்தியபடி பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் பெண்களுக்கெதிரான தடுப்பு சிறப்பு அழைப்பு எண்களும், குழந்தை திருமணம் ஒரு குற்ற செயல் எனவும் பதாகையில் குறிப்பிடப்பட்டிருந்தது.ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி ,வஉசி வரை சென்று நிறைவடைந்தது.
இதில் சமூக நல ஆர்வலர் கோதனவள்ளி, சமூக நல அதிகாரி தங்கமணி, இமயம் என் ஜி ஓ மீனாட்சி, பேராசிரியர் தமிழரசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.