கோவை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட 2 பேர் கைது..8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த தனிப்படை காவல்துறையினர்.
கோவை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட 2 பேர் கைது..8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த தனிப்படை காவல்துறையினர்.
கோவை நவம்பர் 30-
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், அரசால் தடை செய்யப்பட்ட மற்றும் மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய போதை பொருட்களை விற்பனை செய்வோர்கள் மீது அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
அதன் அடிப்படையில் இன்று(30.11.2022) தனிப்படை காவல்துறையினர் கருமத்தம்பட்டி நான்கு ரோடு சந்திப்பு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையை சேர்ந்த முருகன் என்பவரது மகன் கண்ணன் @சித்திக்(22) மற்றும் மதுரை மாவட்டத்தை சேர்ந்த தேவராஜ் என்பவரது மனைவி லட்சுமி (38) ஆகிய 2 பேரையும் கைது செய்து, அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த ரூ 3,50,000/- மதிப்புள்ள
8 கிலோ கஞ்சா* மற்றும் ரூ.70,000/- ரொக்க பணமும் பறிமுதல் செய்து, மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
இது போன்ற சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்* அவர்கள் எச்சரித்துள்ளார்.
இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100* என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.