வாடகை அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும்,கோவை மலர் வியாபாரிகள் கோரிக்கை…

Spread the love

 

 

வாடகை அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும்,கோவை மலர் வியாபாரிகள் கோரிக்கை…

 

 

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் பூ மார்க்கெட் வியாபாரிகளுக்கான கூட்டம் நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட மலர் வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய

கோவை மாவட்ட மலர் வியாபாரிகளின் சங்க தலைவர் செல்வகுமார் கூறுகையில். பன்னீர்செல்வம் பூ மார்க்கெட் கட்டிடம் புணரமைத்து தங்களுக்கு வழங்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது,

 

மேலும் மாநகராட்சி கடைகளுக்கு 10தேதிக்குள் வாடகை செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.குறிப்பிட்ட தேதிக்குள் வாடகை செலுத்த முடியாத பட்சத்தில் 18சதவீதம் அபராதத்தை மாநகராட்சி வசூல் செய்கிறது.

 

இதனை ரத்து செய்ய வேண்டும் என வணிகர் சங்கத்தின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரமராஜா கடந்த வாரத்தில் தலைமை நிலைய செயலாளரை சந்தித்து மனு கொடுத்துள்ளனர். இதனை ஆவணம் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததற்க்கு தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் பேரமைப்பின் சார்பில் நன்றியை தெரிவிப்பதாக கூறினார்.பூ மார்க்கெட் கட்டிடத்தினை பார்வையிட்டு திட்ட மதிப்பீடு செய்து,தொடங்கி வைத்த அமைச்சர் செந்தில் பாலஜிக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post மது குடிக்க பணம் தராத மனைவி மிரட்டுவதற்காக மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்கப் போவதாக நாடகம் ஆடியவர் தீயில் கருகி சாவு
Next post கோவை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட 2 பேர் கைது..8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த தனிப்படை காவல்துறையினர்.