கோவையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது
கோவையில் இளைய தளபதி உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, கோவை மாவட்ட மாநகர உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக குணியமுத்தூர் பகுதியில் புதிய பெயர் பலகை திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது…
தி.மு.க.இளைஞரணி தலைவரும்,சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்,பிரபல தயாரிப்பாளர்,நடிகருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும், கோவை மாவட்ட மாநகர உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ,இளைய தளபதி உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்ட மாநகர உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக புதிய பெயர் பலகை திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோவை மாநகராட்சி குணியமுத்தூர் தெற்கு மண்டலம் முன்பாக நடைபெற்றது. கோவை மாவட்ட தலைவர் இருகூர் உதயபூபதி,கோவை மாவட்ட செயலாளர் மற்றும் 87 வது வார்டு மாமன்ற உறுப்பினர் உதயநிதி பாபு, மாநகர தலைவர் டேவிட் ராஜா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில், கோவை மாநகர செயலாளர் முனி பாண்டி, டேவிட் பீட்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன், கோவை மாநகராட்சி தலைவர் கார்த்திகேயன் குனியமுத்தூர் பகுதி செயலாளர் லோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய பெயர் பலகையை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.இதில், 11 மகளிர்க்கு தையல் இயந்திரம், 4 நபர்களுக்கு இஸ்திரிப்பெட்டி மாற்றுத்திறனாளி ஒருவருக்கு சுய தொழில் செய்ய ஒரு பெட்டிக்கடை ,கல்லூரி மாணவிக்கு கல்வி உதவித்தொகை, மருத்துவ உதவி தொகை,அரசு பள்ளிக்கு குடிநீர் தொட்டி,.மற்றும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு உணவு தட்டு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன..இந்நிகழ்ச்சியில், 88வது வார்டு மாமன்ற உறுப்பினர் செந்தில்குமார்,93வது வார்டு மாமன்ற உறுப்பினர் இளஞ்சேகரன்,உட்பட, வட்டக் கழக நிர்வாகிகள்,மாமன்ற உறுப்பினர்கள் ரசிகர் மன்ற பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..