ஆன்லைனில் பணத்தை இழந்தவர்களுக்கு பணத்தை மீட்டுக் கொடுத்த சைபர் கிரைம் காவல்துறையினர்.

Spread the love

ஆன்லைனில் பணத்தை இழந்தவர்களுக்கு பணத்தை மீட்டுக் கொடுத்த சைபர் கிரைம் காவல்துறையினர்.

 

 

கோவை நவம்பர் 25-

 

 

கோவை மாவட்டத்தில் வடவள்ளி, பொள்ளாச்சி, சூலூர் மற்றும் அன்னூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஆன்லைனில் OTP மூலமாக பணத்தை இழந்த நபர்கள் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு ரூ.2,08,374/- பணத்தை இழந்தவர்களுக்கு மீட்டுக் அவர்களுடைய வங்கி கணக்கிற்கு திரும்ப பெற்றுக் கொடுத்தனர்.

 

 

 

துரிதமாக செயல்பட்டு பணத்தை மீட்டதற்கான ஆவண சான்றிதழை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இன்று 25.11.2022 பாதிக்கப்பட்டவரிடம் வழங்கினார்.

 

 

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களுக்கு, ஆன்லைனில் குறைந்த பணத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என செயலிகளில் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், இணையதளத்தில் உங்களது பணத்தை இழந்து விட்டால் 1930* என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் என்றும்,சைபர் கிரைம் புகார்களுக்கு www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்தால் கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் உங்களை தொடர்பு கொண்டு நீங்கள் இழந்த பணத்தை மீட்டுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் மனித உரிமைகள் பற்றிய அடிப்படை பயிற்சி திட்டம் துவங்கியது.
Next post கோவையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது