நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 4 இயற்கை உணவுகள் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய ஆலோசகர் ஷீலா கிருஷ்ணசாமி தகவல்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 4 இயற்கை உணவுகள் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய ஆலோசகர் ஷீலா கிருஷ்ணசாமி தகவல்
கோவை, ஏப். 26-
பருவ நிலைகள் மாறும்போது, உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், சிறந்த நிலையில் வைத்து கொள்ளவும் ஆரோக்கியமான மற்றும் சீரான உணவில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம் ஆகும். எனவே உங்கள் அன்றாட உணவில் பாதாம், பருவ காலத்திற்கேற்ற பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற இயற்கை உணவுகளைச் எடுத்துக் கொள்வது என்பது நோய்களை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான கூடுதல் சக்தியை அளிக்கும். இந்த நிலையில் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் பருவகால காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் வராமல் தடுக்க உதவும் 4 இயற்கை உணவுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவை பாதாம், பாதாம் சுவையானது மட்டுமல்லாமல், அதில் வைட்டமின் ஈ, துத்தநாகம், போலேட் மற்றும் இரும்புச் சத்து உள்ளிட்ட நோய் எதிர்ப்பு செயல்பாட்டிற்கு முக்கியமான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளன. தினமும் ஒரு கைப்பிடி பாதாமை சிற்றுண்டியாக எடுத்துக்கொள்ளும்போது அல்லது உங்கள் காலை உணவில் சேர்த்துக் கொள்ளும்போது அது உங்கள் உடலுக்கு கூடுதல் ஆரோக்கியத்தை தருகிறது.புளிப்பு சுவை மிகுந்த பழங்கள் ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துகுடி மற்றும் திராட்சை போன்ற புளிப்பு சுவைமிகுந்த பழங்களில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. இது வெள்ளை ரத்த அணுக்களின் உற்பத்திக்கு தேவையான ஊட்டச்சத்து ஆகும். மேலும் இது நோய்த் தொற்றுகளுக்கு எதிராக உடலை பாதுகாப்புகாக வைத்திருக்க உதவுகிறது. இந்த பழங்களை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளும்போது அவை உங்களுக்கு ‘வைட்டமின் சி’யை அதிகரிக்கச் செய்வதோடு, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியையும் ஆதரிக்கிறது. பூண்டு மருத்துவப் பயன்பாட்டைப் பொறுத்தவரை பூண்டு நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. இது அதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது, இதில் இயற்கையான அல்லிசின் என்னும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உள்ளது. உங்கள் உணவில் பூண்டைச் சேர்ப்பது சுவையை சேர்ப்பது மட்டுமல்லாமல், நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. சுவை மற்றும் ஆரோக்கியத்திற்காக குழம்பு, சூப்கள், பொரியல் மற்றும் சாஸ் போன்றவற்றில் நறுக்கிய பூண்டைச் சேர்க்கும்போது அது அந்த உணவுகளுக்கு கூடுதல் சுவையை அளிக்கிறது.கீரைகள் பல்வேறு வகையான கீரைகள், முருங்கை கீரை, புதினா போன்றவற்றில் வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை நோய் எதிர்ப்பு செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றில் வைட்டமின்கள் ஏ மற்றும் சி மற்றும் போலேட், ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆதரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. உங்கள் உணவில் சத்தான மற்றும் சுவையை அதிகரிக்க, குழம்பு, பொரியல், சாலடுகள் ஆகியவற்றில் உங்களுக்கு விருப்பமான கீரைகளை சேர்த்து சாப்பிடும்போது அது உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.