சுற்றுலா பயணி வாகனங்களில் பாதுகாப்பு காரணமாக எரிவாயு சிலிண்டர் பறிமுதல் நடவடிக்கை
சுற்றுலா பயணி வாகனங்களில் பாதுகாப்பு காரணமாக எரிவாயு சிலிண்டர் பறிமுதல் நடவடிக்கை
முதலில் சுகாதாரமாக நியாயமான விலையில் உணவு கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் என சுற்றுலா பயணிகள் அதிருப்தி.
ஊட்டி உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் ஓட்டல்களில் உணவு பொருட்கள் விலை உயர்வை மற்றும் சுகாதாரமின்மை கரணமாக சுற்றுலா பயணிகள், வீட்டிலிருந்து உணவுகளை எடுத்து வருவதுடன் சமையல் பொருட்களை கொண்டுவந்து சாலையோரங்களில் சமைத்துசாப்பிடுகின்றனர்
ஊட்டி, குன்னுார் உட்பட பிற சுற்றுலா தலங்களுக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
முன்பு குடும்பத்துடனும், குழுவாகவும் சுற்றுலா வருபவர்கள் ஓட்டல்ககளில் குறைந்த விலையில் கிடைக்கும் உணவை நம்பி வந்தனர்.
தற்போது, ஊட்டி உட்பட ஓட்டல்களில் ஏற்பட்டுள்ள உணவு பொருட்ளின் விலை உயர்வுஅவர்களின் சுற்றுலாவுக்கான செலவு அதிகரிக்க செய்து வருகிறது. சமாளிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.இத்துடன் பல உணவங்களில் சுகாதாரமின்மையும் காணப்படுகிறது
இதனால் சுற்றுலா வரும் நடுத்தர வர்க்க சுற்றுலா பயணிகள், செலவுகளை சமாளிக்க, தங்களுக்கு தேவையான காலை, மதிய உணவுகளை வீட்டிலேயே சமைத்து எடுத்து வர துவங்கியுள்ளனர். பலர் சமையல் பொருட்களை கொண்டுவந்து சாலையோரங்களில் வாகனத்தை நிறுத்தி உணவு சமைத்து உட்கொண்டு செல்கின்றனர்.
இந்த நிலையில் நீலகிரியில் சுற்றுலா பயணி வாகனங்களில் எரிவாயு சிலிண்டர் பறிமுதல் நடவடிக்கை தொடங்கி உள்ளது
ஊட்டியில் சாலைகளில் வரும் சுற்றுலபயணிகளின் வாகங்களை சோதனையிட்டு எரிவாயு சிலிண்டர்களை பறிமுதல் செய்கின்றனர்
வட்டார போக்குவரத்து அலுவலர் ,மற்றும் வட்ட உணவு.பொருள் வழங்கும் அலுவலர் தலைமையில் நடைபெற்ற இந்த சோதனைகளன பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கைக்காக நடைபெறுவதாக கூறப்பட்டது
இது குறித்து சுற்றுலாப் பயணிகள் கூறுகையில் இது நல்ல நடவடிக்கைதான் ஆனால் ஊட்டி உட்பட அனைத்து சுற்றுலா தலங்களில் உள்ள ஓட்டல்களல் நகர பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் உணவு பொருட்கள் விலையை சமாளிக்க முடியாத நிலை உள்ளது.
இதனால், எங்களுக்கு தேவையான உணவுகளை வீட்டிலிருந்து சமைத்து எடுத்து வருகிறோம். அல்லது சாலைஓரங்களில் சமைத்து சாப்பிடுறோம் இதன் மூலம் செலவு குறைவதுடன் எங்களின் உடல் நலம் பாதிக்காது,’
உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான நீலகிரியில் நியாயமான விலையில் உணவு சுகாதாரமான உணவு கிடைத்தால் நாங்கள் ஏன் சமையல் பொருட்களுடன் வருகிறோம் முதலில் அதற்கு வழி வகை செய்யுங்கள் என்றனர்.