கார்த்திகை பிறந்தது கோவை சித்தாபுத்தூர் ஐயப்பன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
கார்த்திகை பிறந்தது கோவை சித்தாபுத்தூர் ஐயப்பன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
கோவை நவ 17,கார்த்திக் மாதம் 1 ம் தேதி நேற்று சுவாமி ஐயப்பன் பக்தர்கள் மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்க கோவையின் சபரிமலை என்று அழைக்கப்படும் சித்தாபுத்தூர் ஐயப்பன் திருக்கோவிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலை அணிவித்து கொண்டனர்.
கேரளா பந்தலத்து ராஜாவாக அவதரித்த சுவாமி ஐயப்பன் தாயின் உயிரை காக்க மகிஷி என்ற அரக்க குழு பெண்ணை வதம் செய்து புலி பால் கொண்டு வந்தார் என்று புராணங்களும், இதிகாசங்களும் சொல்கின்றது. அதேபோல் பொன், பொருள்,ஆசைகளை துறந்து ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் தத்துவத்தை உணர்த்தும் வகையில் தன்னுடைய அவதாரத்தை உணர்ந்து காந்த மலையில் குடிகொண்டார் என்று சொல்லப்படுகின்றது. மனிதர்களாக பிறந்தவர்கள் பொன்,பொருள்,ஆசை துறந்து 48 நாட்கள் சன்னியாசி விரதம் இருந்து இருமுடி எடுத்து ஏற்ற தாழ்வுகளை இல்லாமல் 18 படிகள் ஏறி வந்து தன்னை வழிபட வேண்டும் என்று சுவாமி ஐயப்பன் சொன்னதாக சொல்லப்படுகின்றது.
அவ்வாறு மனித மாண்பை போற்றும் விதமாக நம்முடன் வாழ்ந்த சுவாமி ஐயப்பன் அருளை பெறும் விதமாக இன்று கார்த்திகை 1ம் தேதியான நேற்று பக்தர்கள் தங்கள் விரதத்தை தொடங்க கருப்பு,நீல வண்ண ஆடைகளை அணிந்து மாலை அணிவித்து கொள்ள கோவையின் சபரிமலை என்று சுவாமி ஐயப்பன் பக்தர்கள் அன்புடன் அழைக்கும் கோவை சித்தாபுத்தூரில் அமைந்துள்ள சுவாமி ஐயப்பன் திருக்கோவிலில் பக்தர்கள் 1000 மேற்பட்டவர்கள் திரண்டு வந்தனர்.
இந்த திருக்கோவிலில் வருடம் முழுவதும் அதிகாலையில் ஐயப்பன் பக்தர்கள் நடத்தி வரும் பஜனை நிகழ்ச்சி புதிதாக கோவிலுக்கு வருகை தருபவர்களுக்கு ஆச்சரியத்தையும்,பக்தி பரவசத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருந்தது.
கடந்த 2020-ல் ஏற்ப்பட்ட கொரானா நோய் பரவல் காரணமாக கடந்த 3 ஆண்டுகள் பெரிய பாதை வழியாக சென்று சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு கார்த்திகை மாதமே பெரிய பாதையும் திறக்கப்படும் என சபரிமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது சுவாமி ஐயப்பன் பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தி உள்ளது.
இதனால் கடந்த 3 ஆண்டுகளை விட இந்த ஆண்டு ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடன் ஐயப்பன் பக்தர்கள் மாலை அணிய திரண்டு வந்துள்ளதை உணர முடிகின்றது.