76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏழை,எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது – கோவை சி.எம்.ஸ்டீபன் ராஜ் தகவல்.
அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையம் சார்பில்
76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏழை,எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது – கோவை சி.எம்.ஸ்டீபன் ராஜ் தகவல்.
அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையம் சார்பில் கோவை புலிய குளத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் நிறுவனத் தலைவர் கோவை சி.எம். ஸ்டீபன் ராஜ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக வரும் 15ம் தேதி இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏழை,எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது என சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதன் விபரம் வருமாறு:-
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு கோவை மாநகர மாவட்ட மகளிர் அணி தலைவி ஜோஸ்பின் மெர்சி, இந்த கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்புரையாற்றினார். மாநில மகளிர் அணி தலைவி கரோலின் விமலா ராணி, கௌரவ தலைவர் ஸ்டீபன் செயற்குழு உறுப்பினர் எஸ். கிறிஸ்டி மோனிஷா, கௌரவ ஆலோசகர்கள் ஜான்,லியோ பெர்னாண்டஸ், புகழேந்தி ,சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சீலா ராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் நல மையத்தின் மாநில துணைத்தலைவர் பாஸ்டர். டாக்டர். ராஜன் மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பாதுகாப்பு கிடைக்கவும் அங்கு நிரந்தர அமைதி நிலவும் விசேஷ ஜெபம் ஏறெடுத்தார்.
இக்கூட்டத்தில் தமிழ் அமுதம் காளிதாஸ் அறப்பணி மையத்தின் தலைவர், நல மையத்தின் மதிப்புரை அவை தலைவர் தமிழ் அமுதம் அய்யாசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் மாணிக்கம் ,எபினேசர் இமானுவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இந்திய திருநாட்டின் 76 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நல மையம் சார்பில் தேசிய கொடி ஏற்றி வைத்து ஏழை எளிய தாய்மார்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் அனைத்து சமய தலைவர்களையும், அனைத்து அரசியல் கட்சியினரையும், தமிழ் அறிஞர்களையும் அழைத்து மிகச் சிறப்பான முறையில் விழா நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தின் நிறைவாக கௌரவ ஆலோசகர் அருள் டிசில்வா நன்றி கூறினார்.