மாற்று இடம் தேர்வு செய்யும் வரை அறிவுசார் மைய கட்டிடப் பணியை நிறுத்த வேண்டும். அரசுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வலியுறுத்தல்.
மாற்று இடம் தேர்வு செய்யும் வரை அறிவுசார் மைய கட்டிடப் பணியை நிறுத்த வேண்டும். அரசுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வலியுறுத்தல்.
கோவை நவம்பர் 23- முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகராட்சியில் தமிழக அரசால் ரூ. 187.39 லட்சம் மதிப்பில் அறிவுசார் மையம் அமைக்க ஆணையி டப்பட்டுள்ளது. ஆனால், இதற்காக தேர்வு செய்யப்பட்ட இடமானது மணி நகர் நகராட்சி உயர்நிலைப்பள்ளி வளா கத்தில் அமைந்து ள்ளது. இந்த மணிநகர் நகராட்சி உயர்நிலைப்ப ள்ளியானது மேட்டுப்பாளையம் நகரா ட்சிலேயே மேல்நிலை ப்பள்ளியாக தரம் உயர்த்த வாய்ப்பு உள்ள ஒரே பள்ளி ஆகும். ஏனெனில், இப்பள்ளி வளாகத்தில் மட்டும் தான்,
கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு ஏதுவாக காலியிடம் உள்ளது.ஆகவே, அறிவுசார் மையம் அமைக்க நகராட்சி ஆணையாளரிடமும், நகராட்சி பொறியாளரிடமும் வேறு மாற்று இடம் ஏற்பாடு செய்து கொள்ள பலமுறை நேரில் மேட்டுப்பாளையம் நகராட்சி அ.தி.மு.க. உறுப்பினர்கள் 9 பேர் ஒன்றிணைந்து கேட்டுக்கொ ண்டும்,
அதனை அவர்கள் செவிமடுத்து கேட்க தவறி, பொருட்படுத்தாமல் அறிவுசார் மைய திட்டப்பணிக்கு ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு, நகர மன்றத்தின் தீர்மானத்திற்கு 29.07.2022-ல் கொண்டு வரப்பட்டது. அன்றைய தினம் இந்த தீர்மானத்தை நிறுத்தி வைக்கவும், மாற்று இடம் தேர்வு செய்ய வேண்டும்
எனவும் வலியுறுத்தி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் வருவாய் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வார காலத்தில் ஆலோசனை செய்து இடம் தேர்வு செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என உத்தரவாதம் அளித்ததால் உள்ளிருப்பு போராட்டம் கைவிடப்பட்டது. கோட்டாட்சியர் ஆய்வுக்காக வந்தபோது நகராட்சி ஆணையாளர்
ஒரே இடத்தை மட்டும் காண்பித்து விட்டு வேறு எந்தவொரு இடமும் இல்லை என கூறியிருக்கிறார். தொடர்ந்து கடந்த 31.10.2022-ல் பள்ளியில் கட்டுமான பணிகளுக்கான பூர்வாங்க பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனை நகராட்சி பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் தடுத்து நிறுத்தி உள்ளனர். இதுதொடர்பாக ஏ.கே. செல்வராஜ் எம்.எல்.ஏ. கலெக்டரிடம் பேசி அறிவுசார் மையம் கட்ட மாற்று இடம் தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
அதன்பிறகும் மீண்டும் மணிநகர் பள்ளி வளாகத்திலேயே அறிவுசார் மையம் கட்டிட பணிகளை காவல்துறையின் உதவியுடன் நேற்றுமுன்தினம் மேற்கொண்டதை பொதுமக்கள் உதவியுடன் நிறுத்த முயன்றதால் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர்கள் எதிர்ப்பை மீறி சர்வாதிகார போக்குடன் கட்டுமான பணிகளை தொடர்வது கண்டனத்துக்கு உரியது. அரசியல் காழ்ப்பு ணர்ச்சிகளை மறந்து மாற்று இடம் தேர்வு செய்யும் வரை கட்டுமானப் பணிகளை நிறுத்தவும்,
மக்கள் நலனை மட்டுமே கவனத்தில் கொள்ள இந்த அரசு முன்வர வேண்டும் என மேட்டுப்பாளையம் பகுதி வாழ் மக்களின் சார்பிலும், கோவை மாவட்ட அ.தி.மு.க. சார்பிலும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.