உடல் நலக்குறைவால் நடிகர் கமலஹாசன் மருத்துவமனையில் அனுமதி.

Spread the love

உடல் நலக்குறைவால் நடிகர் கமலஹாசன் மருத்துவமனையில் அனுமதி.

சென்னை நவம்பர் 24- நடிகர் கமல்ஹாசன் இந்தியன்-2 படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில் தனியார் டி.வி. தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று வருகிறார். இதுமட்டுமல்லாமல், கட்சி பணியிலும் தொடர்ந்து ஈடுபடுகிறார். கடந்த 3 தினங்களுக்கு முன்பு ஐதராபாத் சென்ற நடிகர் கமல்ஹாசன்,

அங்கு இயக்குனர் விஸ்வநாத்தைச் சந்தித்தார். மேலும் அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நேற்று மதியம் சென்னை திரும்பினார். இந்நிலையில், நேற்று இரவு அவருக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். வழக்கமான பரிசோதனைக்காகவே கமல்ஹாசன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

டாக்டர்கள் ஓய்வு எடுக்க சொன்னதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என கமல்ஹாசன் தரப்பினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post மாற்று இடம் தேர்வு செய்யும் வரை அறிவுசார் மைய கட்டிடப் பணியை நிறுத்த வேண்டும். அரசுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வலியுறுத்தல்.
Next post கோவையில் விவசாயிகள் குறைவு கூட்டம் வருகிற 30–ம் தேதி நடைபெறுகிறது.