கோவை பீளமேடு பத்மாவதி அம்மாள் அரங்கில் கைவினை கண்காட்சி துவங்கியது – 10 நாட்கள் நடைபெறுகிறது
கோவை பீளமேடு பத்மாவதி அம்மாள் அரங்கில் கைவினை கண்காட்சி துவங்கியது – 10 நாட்கள் நடைபெறுகிறது
கோவை செப் 3, கைவினை கலைஞர்களின் கலையை ஊக்கு விக்கும் வகையில் கோவை, பீளமேடு அடுத்த ஹோப்ஸ் பகுதியில் உள்ள பத்மாவதி அம்மாள் அரங்கில் கைவினை கண்காட்சி தொடங்கி இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.
இந்திய நாட்டில், உள்ள அனைத்து கைவினை கலைஞர்களின் கலையை மேம்படுத்தவும், கைவினை கலைஞர்களின் கலைகளை, அனைவரது மத்தியி்லும் எடுத்து செல்லும் வகையில், கோவை பீளமேடு அடுத்த ஹோப்ஸ் பகுதியில் உள்ள பத்மாவதி அம்மாள் அரங்கில், 10 நாட்கள் நடைபெறும் கைவினை பொருட்கள் கன்காட்சியான கலா சந்தையின் இரண்டாவது நாளில் இக்கண்காட்சியின் ஒருங்கினைப்பாளர், ஜெயந்த், செய்தியாளர்களிடம் கூறியதாவது, கோவையில் மூன்றாவது முறை யாக நடத்த படுகின்ற இந்த கண்காட்சியில், 80க்கும் மேற்பட்ட அரங்குகள் அமையபெற்ற்ள்ளது, இதில், காஷ்மிர் ஹரியாணா, பஞ்சாப், அசாம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஹிமாச்சல் பிரதேசம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், இயந்திரங்களின் உதவியில்லாமல், கைவினை கலைஞர்கள் தங்களது தனிபட்ட வடிவமைப்புகளை வெளிபடுத்த வழியின்றி தவித்து வருகின்றனர், அவ்வாறு உள்ள கலைஞர்களின் கலைகளை உலகறிய செய்யும் வகையில், தமிழகம் முழுவதும் இது மாதிரியான கண்காட்சிகளை நடத்தி வருகின்றதாகவும் சென்னையில் நடத்த பட்ட கண்காட்சி நல்ல வரவேற்பை பெற்றது, இதனை தொடர்ந்து கோவையிலும் 10 நாட்கள் நடத்த திட்ட மிட்டு நடைபெற்று வருகின்றது, இங்கு, வீட்டு அலங்கார பொருட்கள், மெத்தை விரிப்புகள், விதவிதமான கம்மல், மூக்குத்தி, ஜிமிக்கிகள், மேற்கிந்திய ஆடைகள், இரவு அலங்கார விளக்குகள் என 200க்கும் மேற்பட்ட பொருள்கள் இடம்பிடித்துள்ளது என்றார்,