எஸ்எஸ்விஎம் பள்ளி ஆசிரியர்களுக்கு உத்வேக குரு விருதுகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் வழங்கினார்.

Spread the love

எஸ்எஸ்விஎம் பள்ளி ஆசிரியர்களுக்கு உத்வேக குரு விருதுகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் வழங்கினார்.

கோவை செப் 3,

கோவை சிங்காநல்லூர் பகுதியில் அமைந்துள்ள எஸ்எஸ்விஎம் பள்ளயில் செப்டம்பர் 1 தொடங்கி 3, ம் தேதி மூன்று நாட்கள் வரை நடந்த டிரான்ஸ்ஃபார்மிங் இந்தியா கான்க்ளேவ் 2023 என்ற மாநாடு நடைபெற்றது இந்த மாநாட்டின் இறுதி நாளான இன்று கல்விப் பணிப்பாளரும், ரூஹ் நிறுவனத்தின் இணை நிறுவனருமான ஸ்ரீஷா மோகன்தாஸ் இந்த நிகழ்வை துவக்கி வைத்து வரவேற்புரை ஆற்றினார்,

 

கடந்த இரண்டு நாட்களாக இந்த மாநாட்டில் கலந்து கொண்டு மாணவர்களிடைய உரையாற்றியவர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

 

மேலும் இன்றைய நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்கிறேன் என கூறினார். இன்றைய விழாவில் உத்வேக குரு விருது பெறும் அனைத்து ஆசிரியர்களும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்‌ என தனது உரையை நிறைவு செய்தார்.இந்த மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்புரை ஆற்றினார்,ஆசிரியர்ஙளுக்கு உத்வேக குரு விருதுகளை வழங்கினார்.

கோவை மாநகராட்சியின் ஆணையாளர் பிரதாப் பேசுகையில் , சமுதாயத்தில் கல்வியாளர்களின் பங்கு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று.ஒரு சமூகத்தை அறிவார்ந்த, தொழிலதிபர்களாக உருவாக்கும் முக்கிய பங்கினை ஆசியர்கள் செய்து வருகின்றனர். டிரான்ஸ்ஃபார்மிங் இந்தியா கான்க்ளேவ் 2023 மாநாட்டில் ஒரு பகுதியாக இருப்பதற்கும், நமது தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஆசிரியர்கள் முழு அர்ப்பணிப்பைக் காண்பதற்கும் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஆசிரியர்கள் போற்றப்படதா நாயகராகள், நாளைய தலைவர்கள், தொழில்முனைவோர் மற்றும் தொழில் வல்லுநர்களை உருவாக்க கூடியவர்கள்.இந்தியாவின் இளைஞர்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக, ஒன்றாக இணைந்து, ஒளிமயமான, வளமான இந்தியாவிற்கு வழி வகுத்து வருகிறோம்.

சேத்தன் தம்பே, ஜம்பிங் ஜாக் கயிறு மூலம் தனது மந்திரத்தால் பார்வையாளர்களை பிரமிக்க வைத்தார். அவன் சொன்னான்

 

“உங்கள் திறன், உள்ளார்ந்த திறமை ஆகியவற்றைக் கண்டறிந்து, நீங்கள் வெற்றிபெறும் வரை இலக்கைத் தாக்க முயற்சிக்கவும்.” என் தனது உரையை நிறைவு செய்தார்.

 

.இந்த நிகழ்ச்சியில் எஸ்எஸ்விஎம் கல்வி நிறுவனர், டாக்டர் மணிவேகலை மோகன், ஹவுஸ் ஆப் எக்ஸ் நிறுவனர் ராஜ் ஷாமனி, திரைப்பட நடிகை, வித்யுலேகா ராமன், டாக்டர் விசாலினி என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post கோவை பீளமேடு பத்மாவதி அம்மாள் அரங்கில் கைவினை கண்காட்சி துவங்கியது – 10 நாட்கள் நடைபெறுகிறது
Next post ஜார்க்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் இறைப்பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார்