ஜார்க்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் இறைப்பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார்
கோவை மலுமிச்சம்பட்டி நாகசக்தி அம்மன் பீடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜார்க்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் இறைப்பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார்…
கோவை செப் 4,
கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள நாகசக்தி அம்மன் தியான பீடத்தில் சிறப்பாக இறைப்பணி ஆற்றும் பொது மக்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.நாகசக்தி அம்மன் பீடத்தின் நிறுவனர் ஸ்ரீலஸ்ரீ பாபுஜி சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.இராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு இறைப்பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழக அரசு எல்லோருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமை என்று கூறிய அவர், யாரலாம் சமூகத்திற்கு தொண்டாற்றுகிறார்களோ நலன் தருகிறார்களோ அவர்களுக்கு உரிய நேரத்தில் பத்மஸ்ரீ விருது வழங்கப்படும் என்று கூறினார்.தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் தீயவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் சிறைச்சாலை தீயவர்கள் இருக்கும் இடமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
வெடிகுண்டு வழக்கில் உள்ளவர்களை ஈடுபட்டவர்களை விடுதலை செய்வது தேசத்திற்கு பாதுகாப்பற்ற செயல் என எச்சரித்த அவர்,குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்தால் மீண்டும் தமிழகத்தில் குண்டு வைப்பார்கள் தெரிவித்தார.