ஆசியாவில் முதல் மார்பக தொழில்நுட்ப பயிற்சி மையத்தை துவக்கியது கோவை கே.எம்.சி.எச் மருத்துவ மையம்.
ஆசியாவில் முதல் மார்பக தொழில்நுட்ப பயிற்சி மையத்தை துவக்கியது கோவை கே.எம்.சி.எச் மருத்துவ மையம்.
கோவை நவ 24, மார்பக சிகிச்சைக்கு என்றே இரு பிரத்யேக மருத்துவ நிபுணர்களைக் பெற்றுள்ள இந்தியாவின் ஒரு சில மருத்துவமனைகளில் கே.எம்.சி.எச் மருத்துவமனையும் ஒன்று.மார்பக இமேஜிங்கில். ஃபெலோஷிப் பயிற்சி அளித்திட இந்தியாவிலேயே முதல்முறையாக கே.எம்.சி.எச் மருத்துவமனை தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பயிற்சி மையத்தை நேற்று கேஎம்சிஎச் ஹோலோஜிக் நிறுவனத்தின் ஆசிய மண்டல துணை தலைவர் மற்றும் பொது மேலாளர் லிண்டா சியா துவக்கி வைத்து உரையாற்றினார். ஆசியாவில் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த கே.எம்.சி.எச் மருத்துவமனை இன்று துவங்கப்பட்ட மையத்தில் பயிற்சி பெறலாம். அதேபோல மருத்துவ உபகரணங்கள் பயன்படுத்தும் சிக்கல்களை இந்த மையம் எண்ணத்தை இந்த மையம் உருவாக்குகிறது.இந்த மையத்தில் மார்பக இமேஜிங்கில் அடிப்படை அம்சம் முதல் அதிநவீன நுட்பங்கள் வரை பயிறச்சி அளிக்கப்படும்.இதனை தொடர்ந்து கேஎம்சிஎச் செயல் இயக்குநர் அருண் பழனிசாமி பேசுகையில் மார்பக புற்று நோய் பெண்களிடம் பரவலாக காணப்படுவதால் மேமோகிராபி பரிசோதனை விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் அவசியமாகின்றது என கூறினார்.