ரஜினிகாந்த் நடித்த தளபதி திரைப்பட போஸ்டர்களை நினைவூட்டும் அஜித் நடிக்கும் துணிவு பட போஸ்டர்கள்
ரஜினிகாந்த் நடித்த தளபதி திரைப்பட போஸ்டர்களை நினைவூட்டும் அஜித் நடிக்கும் துணிவு பட போஸ்டர்கள்
வரும் பொங்கல் அன்று உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் நடிகர் அஜித்குமார் நடிக்க,போனி கபூர் தயாரிக்க,ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரூம் துணிவு திரைப்படத்தை வெளியிட உள்ளதாக தகவல் வெளியானதில் இருந்தே அஜித் ரசிகர்கள் படு குஷியில் இருந்து வருகின்றனர். இந்த படத்துடன் போட்டிக்கு விஜய் நடிக்கும்,தெலுங்கு பட இயக்குநர் தயாரித்து இயக்கும் வாரிசு திரைப்படம் போட்டியாக களம் இறங்க உள்ளதால் தமிழகமே இரண்டு திரைப்படங்கள் மீதும் எதிர்பார்ப்பூ கூடிய உள்ளது.
இன்நிலையில் துணிவு பட போஸ்டர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகின்றது.
இந்த போஸ்டர்களை பார்க்கும் போது 1991,ம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த தளபதி போஸ்டர் வெளியான போது கிடைத்தது போலவே தற்போது அஜித் நடித்த துணிவு போஸ்டர் ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தையும்,எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது என்கின்றனர் சினிமா விமர்சகர்கள்…..
எது எப்படியே ரெட் ஜெயண்ட் நிறுவனம் தற்சமயம் வெளியிட்ட விக்ரம்,லவ் டுடே போன்ற திரைப்படங்கள் வசூல் சாதனை புரிந்து வரும் நிலையில் தற்போது மாஸ் ஓப்பனிங் சூப்பர் ஸ்டார் என்று திரை உலகத்தினரால் அழைக்கப்படும் அஜித் குமாரின் துணிவு திரைப்படம் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்றே சொல்ல வேண்டும்.