கோவை தேவராயபுரம் ஊராட்சியில் இடிந்து விழுந்து நிலையில் உள்ள தொகுப்பு வீடுகள்
கோவை தேவராயபுரம் ஊராட்சியில் இடிந்து விழுந்து நிலையில் உள்ள தொகுப்பு வீடுகள்
கோவை டிசம்பர் 1-
கோவை மாவட்டம் தேவராயபுரம் ஊராட்சியில் சென்றாம்பாளையம், வேலாயுதம்பாளையம், வடக்கு நல்லிக்கவுண்டன்பாளையம், தேவராயபுரம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் சுமார் 110 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டன.
இந்த வீடுகள் ஏழை மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த வீடுகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குழந்தைகளும் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த தொகுப்பு வீடுகள் சிதிலமடைந்து எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
கூரைகளில் பூசப்பட்டிருக்கும் கலவை அவ்வப்போது பெயர்ந்து விழுவதாகவும், இந்த வீடுகள் இடிந்து விழுந்தால் பெரிய அளவிலான உயிர் சேதம் ஏற்படும் என்றும் இந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.
எனவே தேவராயபுரம் ஊராட்சியில் உள்ள சிதிலமடைந்த தொகுப்பு வீடுகளை அகற்றிவிட்டு, புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.