மாற்றுத் திறனாளிகளுக்கு மெகா இலவச செயற்கை மூட்டு முகாம் வரும் 28 ம் தேதி நாராயண் சேவா சன்ஸ்தான் அமைப்பு நடத்துகின்றது.
கோவை மாவட்டம் ராஜஸ்தானின் உதய்பூரைச் சேர்ந்த புகழ்பெற்ற மற்றும் தேசிய விருது பெற்ற சமூக சேவை அமைப்பு நாராயண் சேவா சன்ஸ்தான், தமிழகத்தின் கோயம்புத்தூரில் மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக தனது முதல் மெகா இலவச செயற்கை மூட்டு முகாமை ஏற்பாடு செய்ய உள்ளது. இந்நிகழ்ச்சியானது வருகின்ற ஏப்., 28-ம் தேதி என்.ஜே.புதூர் பிரிவிலுள்ள மகேஸ்வரி பவனில் நடைபெற உள்ளது
சன்ஸ்தானின் மஹா கங்கோத்ரி தலைவர் ரஜத் கவுர், நாராயண் சேவா சன்ஸ்தான், விபத்துகள் அல்லது பிற நோய்களால் உடல் ஊனமுற்ற நபர்களுக்கு உதவுவதில் தன்னலத்துடன் இயலாமையின் துயரமான வாழ்க்கையிலிருந்து அவர்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பத்மஸ்ரீ விருது பெற்ற கைலாஷ் மானவ் அவர்களின் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்ட சன்ஸ்தான் கடந்த 39 ஆண்டுகளாக மனிதநேயம் மற்றும் இயலாமைத் துறைகளில் சேவை செய்து மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ வேண்டும் என்ற உறுதியுடன் செயல்படுகிறது.மாற்றுத்திறனாளி