ஜேஇஇ தேர்வில் ஆகாஷ் எஜூகேஷனல் கல்வி நிறுவனத்தில் படித்து கோவை மாணவர் அகில இந்திய தரவரிசைப் பட்டியலில் 632 இடம் பெற்றுள்ளார்.

Spread the love
ஜேஇஇ தேர்வில் ஆகாஷ் எஜூகேஷனல் கல்வி நிறுவனத்தில் படித்து கோவை மாணவர் அகில இந்திய தரவரிசைப் பட்டியலில் 632 இடம் பெற்றுள்ளார்.
கோவை ஏப் 26,
ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் (ஏஇஎஸ்எல்), கூட்டு நுழைவுத் தேர்வு (ஜேஇஇ) மெயின்ஸ் நடப்பு ஆண்டில் இரண்டாம் அமர்வில் கோவையைச் சேர்ந்த மாணவன் சாதனை படைத்துள்ளார்.
ஏஇஎஸ்எல்-இன் மாணவன் ஸ்ரீராம் மஹாலக்ஷ்மி ஆனந்த், அகில இந்திய தரவரிசைப் பட்டியலில் 632வது இடத்தைப் பெற்று கோயம்புத்தூர் நகரின் டாப்பர்களில் ஒருவராக கல்வித் துறையில் தனது பெயரைப் பதித்துள்ளார். முக்கிய பாடமான இயற்பியலிலும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளார்.
ஸ்ரீராம் எம்.ஏ-வைத் தவிர மேலும் 8 மாணவர்கள்  ரித்திஷ் சங்கர், சஞ்சய் கண்ணா எஸ்டி, மதுஷ்யாம் எம், ஹரிச்சரண் எம், அபிமன்யு சௌத்ரி கே, வி ஸ்ரீநிதி, அவினாஷ் சரஃப் மற்றும் சபரிஷ்  ஆகியோர் 99% மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் முதன்மை கல்வி மற்றும் வணிகத் தலைவர்  தீரஜ் மிஸ்ரா கூறியதாவது:-
இந்திய தரவரிசையில் இடம் பிடித்துள்ள மாணவர்களுக்கு  மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.  “மாணவர்களின் குறிப்பிடத்தக்க செயல்திறனானது, விரிவான பயிற்சி மற்றும் புதுமையான கற்றல் தீர்வுகளை மாணவர்களுக்கு வழங்கி போட்டித் தேர்வுகளில் சிறந்து விளங்க அவர்களை தயார்படுத்துவதில் AESL இன் அர்ப்பணிப்பு மற்றும் உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாகும். அவர்களின் எதிர்கால முயற்சிகள் தொடர்ந்து வெற்றியடைய வாழ்த்துகிறோம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post கோவையில் ஆசியா நகை கண்காட்சி இன்று தொடங்கி வரும் 21ம் தேதி வரை நடைபெறுகின்றது
Next post மாற்றுத் திறனாளிகளுக்கு  மெகா இலவச செயற்கை மூட்டு முகாம் வரும் 28 ம் தேதி நாராயண் சேவா சன்ஸ்தான் அமைப்பு நடத்துகின்றது.