முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் 8வது நினைவு நாள் டாக்டர் ஏபிஜே பசுமை புரட்சி அறக்கட்டளை சார்பில் அனுஷ்டிப்பு
முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் 8வது நினைவு நாள் டாக்டர் ஏபிஜே பசுமை புரட்சி அறக்கட்டளை சார்பில் அனுஷ்டிப்பு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி யில் இயங்கி வரும் டாக்டர் ஏபிஜே பசுமை புரட்சி அறக்கட்டளை சார்பில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு உறுதி மொழியுடன் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்கள் 8 ஆண்டுகளுக்கு முன்பு ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் கல்லூரியில் மாணவர்களுடன் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது மேடையிலேயே மயங்கி விழுந்து தனது இன்னுயிரை நீர்த்தார்.
ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்கள் எழுதிய புத்தகங்களான
அக்னி சிறகுகள்,இந்தியா 2020,எழுச்சி தீபங்கள்,
அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை போன்ற புத்தகங்கள் இன்றும் மாணவர்களின் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகின்றது.தான் இறுதி வரைக்கும் மிகவும் எளிமையான பிரம்மச்சாரியாக வாழ்ந்தார் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம். ‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்’ என்ற அவர் “கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க உறக்கத்தை மறந்து உழைக்க வேண்டும்” என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் விதைத்து சென்றார்.
பொக்ரான அணு குண்டு சோதனை மூலம் இந்தியாவை உற்று நோக்க செய்தவர் விஞ்ஞானியான எபிஜெ.அப்துல்கலாம் அவர்கள்.அவருடைய பொன் மொழிகளாலும்,கவிதைகளாலும்,இவ்வுலகம் உள்ள வரை அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடிக்கும் வண்ணம் உள்ளது.உலகமே போற்றி புகழும் நமது தேசத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர்,அணு விஞ்ஞானி டாக்டர் எ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்களின் நிணைவுகள் நம்மனதில் மட்டும் அல்லாமல் நம்முடன் உள்ளது.இயற்கை இறைவன் கொடுத்த கொடை அதை காக்க வேண்டும் என டாக்டர் எ.பி.ஜெ அப்துல் கலாம் அவர்கள் 1 கோடி மரங்களை நட வேண்டும் என இளைஞர்களிடம் முழங்கியதுடன் தானும் அந்த பணியை மேற்கொண்டார். அவர் விட்டு சென்ற இந்த பணியை இன்று நாமும் பல சமூக ஆர்வலர்கள் செய்து வருவதை நாம் அறிவோம். இன்று எ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்களின் 8ஆம் ஆண்டு நிணைவு தினத்தில் 88மரக்கன்றுகள் நமது அறக்கட்டளை சார்பில் பரிசளிக்கப்பட்டது. மேலும் 88சாலையில் உள்ள ஆதரவற்றோர்களுக்கு உணவு டாக்டர் ஏபிஜே பசுமை புரட்சி அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் தலைவர் சேதுராமன்.துணை தலைவர் உமேஷ் வருகை புரிந்த அணைவரையும் வரவேற்றனர்.
சிறப்பு அமைப்பாளராக ஆலாங்காயம் வட்டார மருத்துவர் பசுபதி.
மற்றும் தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் துணை தலைவர் தேவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இறுதியில் வணங்காமுடி நன்றி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில்
சக்தி,சுரேஷ்குமார்,பிரேம் ,வினோத்,விஜய,ஆனந்த்,ரகு,நரேன்,கார்த்திக், ஜெகன்,ரமேஷ்,லெனின்,
மகேந்திரன்,தேவராஜ்,முரளி,ராஜா, பொன்னன், நந்தகோபாலன்,மற்றும் பலர் கலந்து கொண்டனர். இது போன்று பல்வேறு இடங்களில் நமது கிளையை சார்ந்த நிர்வாகிகளும் உறுப்பினர்களும் முன்னாள் குடியரசுத் தலைவர் எ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளை அனுஷ்டித்து வருகின்றனர்.