திறந்தவெளி மற்றும் ஆற்றில் குப்பை கொட்டினால் கடும் நடவடிக்கை வால்பாறை நகராட்சி எச்சரிக்கை
திறந்தவெளி மற்றும் ஆற்றில் குப்பை கொட்டினால் கடும் நடவடிக்கை வால்பாறை நகராட்சி எச்சரிக்கை.
கோவை நவம்பர் 21-
வால்பாறை:வால்பாறையில், திறந்தவெளியில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும், என, நகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.வால்பாறையில், மத்திய அரசின் துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், நகரை சுகாதாரமான முறையில் மாற்றியமைக்க, நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, வால்பாறை நகரில், குப்பை தொட்டிகள் முழுவதுமாக அகற்றப்பட்டு, வீடு தோறும் துாய்மை பணியாளர்கள் நேரடியாக குப்பை சேகரித்து வருகின்றனர்.இந்நிலையில், வால்பாறை நகரில், சில இடங்களில் பொதுமக்கள் திறந்தவெளியில் குப்பை கொட்டுகின்றனர்.
குறிப்பாக, சோலையாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஒன்றான வாழைத்தோட்டம் ஆற்றில் குப்பை வீசுவதால், சுகாதாரசீர்கேடு ஏற்பட்டுள்ளது.
ஆற்றுப்பாதையில், நீரோட்டமும் தடைபடுகிறது. பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு, அணையை சென்றடைகிறது. திறந்தவெளியில் குப்பை கொட்டினால் ஏற்படும் பாதிப்பு குறித்து, மக்களிடையே நகராட்சி சார்பில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாததால்,
வீடுகளில் வெளியாகும் குப்பையை ஆற்றில் வீசுகின்றனர். இதனால், சுசுாதார சீர்கேடு ஏற்பட்டு, மக்களுக்கு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:வால்பாறை நகராட்சியில், வீடுமற்றும் கடைகளில், நாள் தோறும் காலை நேரத்தில் துாய்மை பணியாளர்கள் நேரடியாக குப்பையை பெற்றுச்செல்கின்றனர்.
இந்நிலையில், அண்ணாநகர், கலைஞர் நகர், எம்.ஜி.ஆர்., நகர், வாழைத்தோட்டம் ஆகிய பகுதிகளில், ஆற்றோரத்தில் வசிக்கும் மக்கள், வீடுகளில் வெளியாகும் குப்பையை, நகராட்சி துாய்மை பணியாளர்களிடம் வழங்காமல், ஆற்றிலும், திறந்தவெளியிலும் விசுகின்றனர்.
இதனால், அந்தப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, குப்பையை தரம் பிரித்து, வீடுதேடி வரும் துாய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். எச்சரிக்கையை மீறி, தெருவிலோ, ஆற்றிலோ குப்பை கொட்டினால், அவர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும்.வால்பாறை நகரை சுகாதாரமான முறையில் மாற்றியமைக்க, நகராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.இவ்வாறு, கூறினர்.
.
கோவை நவம்பர் 21-
வால்பாறை:வால்பாறையில், திறந்தவெளியில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும், என, நகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.வால்பாறையில், மத்திய அரசின் துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், நகரை சுகாதாரமான முறையில் மாற்றியமைக்க, நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, வால்பாறை நகரில், குப்பை தொட்டிகள் முழுவதுமாக அகற்றப்பட்டு, வீடு தோறும் துாய்மை பணியாளர்கள் நேரடியாக குப்பை சேகரித்து வருகின்றனர்.இந்நிலையில், வால்பாறை நகரில், சில இடங்களில் பொதுமக்கள் திறந்தவெளியில் குப்பை கொட்டுகின்றனர்.
குறிப்பாக, சோலையாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஒன்றான வாழைத்தோட்டம் ஆற்றில் குப்பை வீசுவதால், சுகாதாரசீர்கேடு ஏற்பட்டுள்ளது.
ஆற்றுப்பாதையில், நீரோட்டமும் தடைபடுகிறது. பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு, அணையை சென்றடைகிறது. திறந்தவெளியில் குப்பை கொட்டினால் ஏற்படும் பாதிப்பு குறித்து, மக்களிடையே நகராட்சி சார்பில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாததால்,
வீடுகளில் வெளியாகும் குப்பையை ஆற்றில் வீசுகின்றனர். இதனால், சுசுாதார சீர்கேடு ஏற்பட்டு, மக்களுக்கு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:வால்பாறை நகராட்சியில், வீடுமற்றும் கடைகளில், நாள் தோறும் காலை நேரத்தில் துாய்மை பணியாளர்கள் நேரடியாக குப்பையை பெற்றுச்செல்கின்றனர்.
இந்நிலையில், அண்ணாநகர், கலைஞர் நகர், எம்.ஜி.ஆர்., நகர், வாழைத்தோட்டம் ஆகிய பகுதிகளில், ஆற்றோரத்தில் வசிக்கும் மக்கள், வீடுகளில் வெளியாகும் குப்பையை, நகராட்சி துாய்மை பணியாளர்களிடம் வழங்காமல், ஆற்றிலும், திறந்தவெளியிலும் விசுகின்றனர்.
இதனால், அந்தப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, குப்பையை தரம் பிரித்து, வீடுதேடி வரும் துாய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். எச்சரிக்கையை மீறி, தெருவிலோ, ஆற்றிலோ குப்பை கொட்டினால், அவர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும்.வால்பாறை நகரை சுகாதாரமான முறையில் மாற்றியமைக்க, நகராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.இவ்வாறு, கூறினர்