தமிழ்நாடு அரசு எஸ்.டி/எஸ்சி அலுவலர்கள் சங்க தலைவர் ஜெகநாதன் துணை தாசில்தார் பதவி உயர்வில் விதிமீறலை ரத்து செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
தமிழ்நாடு அரசு எஸ்.டி/எஸ்சி அலுவலர்கள் சங்க தலைவர் ஜெகநாதன் துணை தாசில்தார் பதவி உயர்வில் விதிமீறலை ரத்து செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
கோவை, மார்ச்.14
கோவை மாவட்டத்தில் வருவாய் அலகில் வெளியிடப்பட்ட துணை தாசில்தார் பதவி உயர்வு அரசியல் சட்டத்திற்கு எதிராக வழங்கப்பட்டு உள்ளது. அப் பட்டியலை ரத்து செய்ய வேண்டும், என தமிழ்நாடு அரசு
எஸ்.சி, எஸ்.டி, அலுவலர்கள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு
எஸ்.சி, எஸ்.டி, அலுவலர்கள் நலச்சங்கம்
மாவட்ட தலைவர் ஜெகநாதன்
கூறியுள்ளதாவது, கோவையில் பொது பணி – வருவாய் சார்நிலை பணிகளில் துணை தாசில்தார் பட்டியல் வெளி யிட்டுள்ளனர். பட்டி
யல் வகுப்பினர், பழங்குடியினர் காலிப்பணியி
டங்கள் நிரப்புவது குறித்து
முதன்மை செயலர், வருவாய் நிர்வாக ஆணையர் வழங்கிய சுற்றறிக்கை உயர்மட்ட குழுவினரால் ரத்து செய்யப்பட்டது. எனவே கோவை மாவட்டத்தில் அரசியல் சட்டத்திற்கு எதிராக வெளியிடப்பட்டுள்ள துணை தாசில்தார் பட்டி யலை கலெக்டர் ரத்துசெய்ய வேண்டும். உயர்மட்ட குழுவினர் குறிப்பாணையின் படி மீண்டும் புதிதாக துணை தாசில்தார் பட்டியல் வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக கோவை கலெக்டர் அலுகத்தில் தமிழ்நாடு அரசு எஸ்.சி, எஸ்.டி, அலுவலர்கள் நலச்சங்கத்தினர் மனுஅளித்து உள்ளனர்.