பறவைகளுக்கு தண்ணீர் வைக்க மண்பாண்டத் தொட்டிகளை அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்களுக்கு கோவை மாநகர காவல் ஆணையர் வழங்கினார்.. 

Spread the love

 

 

பறவைகளுக்கு தண்ணீர் வைக்க மண்பாண்டத் தொட்டிகளை அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்களுக்கு கோவை மாநகர காவல் ஆணையர் வழங்கினார்..

கோடை காலம் துவங்க உள்ள நிலையில் தன்னார்வ அமைப்பு சார்பில் கோவை மாநகர காவல் நிலையங்களுக்கு பறவைகளுக்கு தண்ணீர் வைக்க மண்பாண்ட தொட்டிகள் வழங்கப்பட்டது. கோடை காலம் துவங்க உள்ள நிலையில் பல்வேறு தன்னார்வலர்கள் மற்றும் தனியார் அமைப்புகள் பறவைகள் மற்றும் செல்ல பிராணிகளுக்கு நீர் ஆதாரங்கள் ஏற்படுத்தி வருகின்றனர். பல்வேறு இடங்களில் பறவைகளுக்காக வீட்டின் மாடிகளில் பறவைக்களுக்கா கூடுகள் அமைத்து உணவு மற்றும் குடிநீர் வைத்து வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக People For Cattle In India என்ற தன்னார்வ அமைப்பு பறவைகளுக்கு தண்ணீர் வைப்பதற்காக மண்பாண்ட தொட்டிகளை வழங்கியுள்ளது. கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கோவை மாநகரில் உள்ள காவல் நிலையங்களுக்கு இந்த மண்பாண்ட தொட்டிகளை வழங்கினார். இந்நிகழ்வில் சுமார் 100 தொட்டிகள் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post பழமை வாய்ந்த கோவில் இடிப்பு, இந்து முன்னணியினர் கண்டனம்..
Next post தமிழ்நாடு அரசு எஸ்.டி/எஸ்சி அலுவலர்கள் சங்க தலைவர் ஜெகநாதன் துணை தாசில்தார் பதவி உயர்வில் விதிமீறலை ரத்து செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு