கோவில்பட்டி வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது

Spread the love

 

தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா – 171 மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டியை கோவில்பட்டி நகர மன்ற தலைவர் கருணாநிதி வழங்கினார்

 

கோவில்பட்டி : செப் 15,தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.. இந்நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சேகர் தலைமை வகித்தார்

 

கோவில்பட்டி நகர்மன்ற உறுப்பினர் ஜாஸ்மின் லூர்து மேரி முன்னிலை வகித்தனர்

 

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கோவில்பட்டி நகர மன்ற தலைவர் கருணாநிதி, மாவட்ட கல்வி அலுவலர் ஜெயபிரகாஷ் ராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் 171 மாணவர்களுக்கு இலவச மிதிவண்டியை வழங்கினார்

இந்நிகழ்வில் திமுக நிர்வாகி அமலி பிரகாஷ், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் பள்ளி ஆசிரியர்கள்,மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post கோவையில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி இரண்டாவது கிளையை மாநகர் காவல் ஆணையர் துவக்கி வைத்தார்
Next post புதுக்கோட்டை அருகே ஆலங்குடியில் நீதிபதி குடி யிருப்பு வளாகம். அமைய உள்ள இடத்தை மாவட்ட டிஆர்ஓ ஆய்வு.