ஆதிதிராவிடர்,பழங்குடியினர் பள்ளியில் ஸ்மார் வகுப்பறைகள் அமைக்க ரூ.3.16 நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வருக்கு ஜனசக்தி லேபர்ஸ் யூனியன் பொதுச்செயலாளர் பழனிசாமி நன்றி!!
ஆதிதிராவிடர்,பழங்குடியினர் பள்ளியில் ஸ்மார் வகுப்பறைகள் அமைக்க ரூ.3.16 நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வருக்கு ஜனசக்தி லேபர்ஸ் யூனியன் பொதுச்செயலாளர் பழனிசாமி நன்றி!!
கோவை 16,
ஆதிதிராவிடர்,பழங்குடியினர் பள்ளியில் ஸ்மார் வகுப்பறைகள் அமைக்க ரூ.3.16 நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வருக்கு ஜனசக்தி லேபர்ஸ் யூனியன் பொதுச்செயலாளர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.அதன் விபரம் வருமாறு:+
கடந்து 7ம் தேதி அன்று தமிழக ஆளுநர் சட்டமன்றப் பேரவையில் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளித்து பேசிய தமிழக முதலமைச்சர் கீழ்க்கண்ட அறிவிப்பை கீழ்கண்ட அறிவிப்பை வெளியிட்டள்ளார்.
“மாநிலத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் மட்டுமின்றி பழங்குடியினர் நலப்பள்ளிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் நிறுவப்படும் என்றும் அதற்கு தேவையான உட்கட்டமைப்புக்கு, கூடுதலாக நிதி ஒதுக்கித் தரப்படும்”.எனவும் தெரிவித்துள்ளார்.
மேற்படி அறிவிப்பினை நிறைவேற்றும் பொருட்டு, 87 ஆதிதிராவிடர் நல உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி மற்றும் 4 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளுக்கு அறிவுத்திறன் வகுப்பறை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திட ரூ.3,13,95,000/-மும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க ரூ.2,09,000/-மும் ஆக மொத்தம் ரூ.3,16,04,000/- (ரூபாய் மூன்று கோடியே பதினாறு இலட்சத்து நான்காயிரம் மட்டும்) நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசாணை எண் 105யை கடந்த 7ம் தேதி வெளியிடப்பட்டுள்ளார் இந்த அறிவிப்பால் 9790 மாணவ / மாணவியர்கள் பயனடைகின்றனர். இந்த மாபெரும் திட்டத்தை தாயுள்ளம் தோடு வெளியிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு ஜனசக்தி லேபர் யூனியன் பொதுச்செயலாளர் என்ற முறையில் எனது நன்றிகளை தெரிவித்துக்க்கொள்கிறேன் என பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்த உறுதுணையாக இருந்த மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், மாண்புமிகு ஜவகர் ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் எங்களது ஜனசக்தி லேபர் யூனியன் சார்பில் தமிழக முதல்வர் அவர்களுக்கு ஆதிதிராவிடர் /பழங்குடியினர் நல துறை சார்பில் மாவட்டங்களில் நியமிக்கப்படும் விழிகன் மற்றும் கண்காணிப்பு கழுக்களில் சமூக ஆர்வலர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளை நியமனம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன் என இச்சங்கத்தின் பொதுச்செயலாளர் பழனிசாமி தனது அறிக்கையின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.