*காசிக்கு செல்லும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சிதம்பரம் ரயில் நிலையத்தில் பாஜக வினர் உற்சாக வரவேற்பு
காசிக்கு செல்லும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சிதம்பரம் ரயில் நிலையத்தில் பாஜக வினர் உற்சாக வரவேற்பு
சிதம்பரம் நவ 18, கடலூர் மாவட்டம் சிதம்பரம் ரயில் நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் . மழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி மயிலாடுதுறை பகுதிகளை பார்வையிட்டு அங்கிருந்து வாரணாசி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் காசிக்கு புனித யாத்திரை செல்கிறார் இந்நிலையில் சிதம்பரத்தில் பாஜக தொண்டர்கள் கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் மருதை மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம் ஆகியோர் தலைமையில் அண்ணாமலைக்கு ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து மலர் தூவி பொண்ணாடை போர்த்தி உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் கொண்டு அவருக்கு கும்ப மரியாதை செய்யப்பட்டது. முன்னதாக ரயில் நிலையம் வந்தடைந்த பாஜக தொண்டர்கள் அனைவரும் பிளாட்பாரம் டிக்கெட் எடுத்துக்கொண்டு வரவேற்பு கொடுக்க காத்திருந்தனர். நிகழ்ச்சியில் கட்சியின் மாநில ,மாவட்ட, ஒன்றிய , கிளை, அணி, பிரிவு நிர்வாகிகள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.