கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் மனித உரிமைகள் பற்றிய அடிப்படை பயிற்சி திட்டம் துவங்கியது.
கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் மனித உரிமைகள் பற்றிய அடிப்படை பயிற்சி திட்டம் துவங்கியது.
கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி மற்றும் புதுடெல்லி தேசிய மனித உரிமைகள் ஆணையம் சார்பில் மனித உரிமைகள் பற்றிய அடிப்படை ஒரு நாள் பயிற்சி திட்டம் தொடக்கவிழா கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. விழாவில் முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் டி. ஆர்.கார்த்திகேயன் கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி மனித உரிமைகள் பற்றிய ஒருநாள் அடிப்படை பயிற்சி திட்டத்தை தொடங்கிவைத்து பேசினார்.
விழாவில் கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலாளர் மற்றும் இயக்குனர் டாக்டர் சி. ஏ.வாசுகி தலைமை தாங்கி வரவேற்று பேசினார்.விழாவில் கல்லூரி முதல்வர் டாக்டர் எம்.லட்சுமணசாமி, கல்லூரி காமர்ஸ் பிரிவு எச்.ஓ.டி.டாக்டர் எம்.ரேவதி, டாக்டர் எஸ்.ஆர்.மதன் சங்கர், டாக்டர் லவ்லினாலிட்டில் பிளவர், வழக்கறிஞர் தேன்மொழி, மற்றும் ஹர்சன வர்மா, மதுரை கோபி சங்கர் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.