சீருடை பணியாளர் தேர்வு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு செல் போன் அனுமதியில்லை – போலீஸ் எஸ்.பி பாலகிருஷ்ணன் தகவல்
சீருடை பணியாளர் தேர்வு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு செல் போன் அனுமதியில்லை – போலீஸ் எஸ்.பி பாலகிருஷ்ணன் தகவல்
திருப்பத்தூர் நவ 27,
வாணியம்பாடியில் சீருடை பணியாளர் தேர்வு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு நடந்த அறிவுரை வழங்கும் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தகவல்.
தமிழகம் முழுவதும் வரும் 27 அன்று சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் காவலர்கள்,தீயணைப்பு வீரர்கள்,சிறைத்துறை பணிகளுக்கான தேர்வு வாணியம்பாடியில் 4 தேர்வு மையங்கள் என மாவட்டம் முழுவதும் 6 மையங்களில் தேர்வுகள் நடைபெற உள்ளது. இதில் ஆண்கள் 6003 பேரும்,பெண்கள் 1315 பேர் என 7318 பேர் தேர்வு எழுத உள்ளனர்.தேர்வு மையங்களில் 7000 போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
தேர்வு மையங்களில் பணிகளில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு தேர்வு பணிகள் குறித்து அறிவுரை வழங்கும் கூட்டம் வாணியம்பாடி தனியார் கல்லூரியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தேர்வு பணியில் ஈடுபடும் காவலர்கள் செல் போன் பயன்படுத்த கூடாது,தேர்வு எழுத வரும் தேவர்களை முழு பரிசோதனை செய்த பின்னர் அனுமதிக்க வேண்டும்,தேர்வர்கள் கையில் பேனா மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும்,என்று அறிவுரை வழங்கினார். இதில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் புஷ்பராஜ் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள காவல் துணை கணகானிப்பாளர்கள், ஆய்வாளர்கள்,காவலர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.