வால்பாறையில் அக்காவின் கணவரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை.

Spread the love

வால்பாறையில் அக்காவின் கணவரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை.

 

 

 

கோவை நவம்பர் 25-

 

 

 

 

கோவை மாவட்டம் வால்பாறை காவல் நிலையத்திற்கு உட்பட்ட காமராஜ் நகரில் வசிக்கும் அனுசியா (35) என்பவரை கடந்த 2021-ஆம் ஆண்டு அவரது கணவர் பழனி ராஜா (33) என்பவர் குடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம் அடைந்த அனுசுயாவின் சகோதரர் கனகரத்தினம் (40) என்பவர் சமையலறையில் இருந்த கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளார்.

 

 

 

இது சம்மந்தமாக வால்பாறை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கின் விசாரணை கோவை குண்டு வெடிப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

 

 

 

இவ்வழக்கின் விசாரணை முடிவு பெற்று இன்று (25.11.2022) வழக்கின் எதிரியான கனகரத்தினம் (40) என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 1000/- அபராதமாக* வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.

 

 

இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன் விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற தலைமைகாவலர் ஆகியோர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post சீருடை பணியாளர் தேர்வு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு செல் போன் அனுமதியில்லை – போலீஸ் எஸ்.பி பாலகிருஷ்ணன் தகவல்
Next post குற்றச்செயல்களில் ஈடுபாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை கோவை மாவட்ட போலீஸ் எஸ்.பி.பேட்டி