*கீரப்பாளையம் ஊராட்சியில் கல்வி கலைத்திருவிழா நடைபெற்றது*

Spread the love

*கீரப்பாளையம் ஊராட்சியில் கல்வி கலைத்திருவிழா நடைபெற்றது*

 

புவனகிரி டிச 1

 

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கீரப்பாளையம் ஊராட்சியில் அரசு பள்ளி மாணவர்களுக்காக தமிழக அரசு உருவாக்கி உள்ள கல்வி கலைத் திருவிழா மிக விமர்சையாக நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் நடைபெற்ற இந்த கலைத் திருவிழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். கீரப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கீரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர்கள் சவரிமுத்து சிறப்புரை வழங்கினார் .அரசு பள்ளி மாணவர்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த கலை நிகழ்ச்சியில் ஓவியம் வரைதல் ,பாட்டு பாடுதல் ,கவிதை, கட்டுரை, நகைச்சுவை, பட்டிமன்றம் என நூற்றுக்கும் மேற்பட்ட போட்டிகள் நடைபெறுகிறது .ஒவ்வொரு பிரிவு போட்டியிலும் தேர்வு செய்யப்படும் வெற்றியாளர்கள் இருவர் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெறுவர் என்பது குறிப்பிடதக்கது. இந்த நிகழ்ச்சியில் மேற்பார்வையாளர் ரமேஷ் வெய்யலூர் பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சி 29.11.22 துவங்கி 5.12.22 வரை தொடர்ந்து நடைபெற இருக்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post மின் பாதை இணைப்பு மீது  விதிமுறைகளை மீறி தொலைபேசி கம்பி வடம் இணைப்பு !
Next post 251 ஊராட்சிகளிலும் நூறுநாள் வேலை வழங்க விவசாய தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்.