மின் பாதை இணைப்பு மீது  விதிமுறைகளை மீறி தொலைபேசி கம்பி வடம் இணைப்பு !

Spread the love

மின் பாதை இணைப்பு மீது

விதிமுறைகளை மீறி தொலைபேசி கம்பி வடம் இணைப்பு !

அகற்ற கோரி மக்கள் கோரிக்கை !!

 

 

கடலூர் டிச 01

மின் பாதை இணைப்பு மீது

விதிமுறைகளை மீறிதொலைபேசி கம்பி வடம் இணைக்கப்பட்டதால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் அவற்றை அகற்ற கோரி கோரிக்கை விடுத்துள்ளனர்

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நான் முனிசிபல் கிராமம் சிவசக்தி நகர் குடியிருப்போர் நலசங்கம் சார்பில்

விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை ;

இந்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று

பி எஸ் என் எல் நிறுவனம்

இதன் மூலம் கண்ணாடி இழை இணையதள இணைப்பு வழங்கப்படுகின்றது, இதற்கான இணைப்பு இழைகளை தனித்தனியே கம்பம் அமைத்து இணைக்காமல், சிவசக்தி நகரில் அமைந்துள்ள மின் கம்பங்களில் இணைத்து இணைப்பு வழஙகப்பட்டுள்ளது .

இதனால் எதிர்பாரவிதமான மின்கசிவு ஏற்பட்டு ஆபத்து நேரிடக் கூடும் என்ற அச்சம் சிவசக்தி நகர்

பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. விதிமுறைகளுக்கு புறம்பாக மின்கம்பங்களில் கட்டப்பட்டுள்ள இணைப்புகளை உடனே அகற்ற வேண்டும் என்றும் சிவசக்தி நகர் குடியிருப்போர் நலசங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post புதுக்கோட்டை அருகே மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டி 
Next post *கீரப்பாளையம் ஊராட்சியில் கல்வி கலைத்திருவிழா நடைபெற்றது*