251 ஊராட்சிகளிலும் நூறுநாள் வேலை வழங்க விவசாய தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்.

Spread the love

251 ஊராட்சிகளிலும் நூறுநாள் வேலை வழங்க விவசாய தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்.

 

காரிமங்கலம் டிர். 01

 

 

அகில இந்திய விவசாயத்தொழிலாளர்கள் சங்கத்தின் தருமபுரி மாவட்ட 4 ஆவது மாநாடு காரிமங்கலம் டி.எஸ்.ஆர்.மாஹாலில் உள்ள தோழர் வி.ஆறுமுகம் நினைவரங்கத்தில் நடைபெற்றது.

 

மாவட்ட தலைவர் வி.ரவி தலைமை வகித்தார்.மாவட்டதுணைத்தலைவர் கே.எல்லப்பன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.ஒன்றியகவுன்சிலரும் வரவேற்பு குழு தலைவருமான வி.உதயக்குமார் வரவேற்றார்.

மாநிலத்தலைவர் ஏ.லாசர் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.

மாவட்ட செயலாளர் எம்.முத்து வேலை அறிக்கை வாசித்தார்.மாவட்ட பொருளாளர் இ.கே.முருகன் வரவுசெலவு கணக்கை சமர்ப்பித்தார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சோ.அருச்சுணன், ஆகியோர் வாழ்த்தி பேசினர்.மாவட்டதுணைத்தலைவர் கே.கோவிந்தசாமி,மாவட்ட நிர்வாகிகள் சி.ராஜா,ரஜினி(எ) முருகன் ,ஜி.பாண்டியம்மாள் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர்.

மாநில பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங்கம் நிறைவுறையாற்றினார்.

 

மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வுசெய்யப்பட்டனர்.

மாவட்ட தலைவராக கே.கோவிந்தசாமி,மாவட்ட செயலாளராக எம்.முத்து,மாவட்ட பொருளாளராக எம்.சிவா,

மாவட்ட துணைத்தலைவர்களாக இ.கே.முருகன்,பி.கிருஷ்ணவேணி ,சி.ராஜா,

மாவட்ட துணைசெயலாளராக ஜி.பாண்டியம்மாள்,எம்.செல்வம்,ஆர்.வெங்கடாச்சலம்,உள்ளிட்ட 25 பேர் கொண்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

 

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

தருமபுரி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து நிவாரணப் பணிகளை துவக்கி விவசாய தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும்.

தருமபுரி மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க ஒகேனக்கல் குடிநீர் திட்ட இரண்டாம் கட்ட திட்ட பணிகளை நிறைவேற்ற வேண்டும்.

 

நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு இரண்டு ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கவேண்டும்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 ஊராட்சிகளிலும் 100 நாள் வழங்கவேண்டும். இத்திட்டத்தை நகர்புறத்திற்கும் விரிவு படுத்தவேண்டும்வேண்டும்.

 

வீட்டுமனையற்ற மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி அரசு வீடு கட்டி தரவேண்டும்.

ஏழை மக்கள் குடும்பத்தில் உள்ள வறுமைக் கோட்டுக்கு மேல் (என்.பி.எச்) என்பதை மாற்றி வருமைகோட்டின் கீழ் கொண்டுவரவேண்டும்.

 

அரசு மூலம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டிக் கொடுத்த வீடுகள் பழுதடைந்து உள்ளதை புதுப்பித்துக்கொள்ள நிதி ஒதுக்கவேண்டும்.

60 வயது பூர்த்தியடைந்த விவசாய தொழிலாளர்களுக்கு ரூபாய் 3000 பென்சன் வழங்கவேண்டும். விவசாயத் தொழிலரளர்களின் நலவாரியத்தை செயல்படுத்தவேண்டும்.

என்னேகால் புதூர், தும்பாஅள்ளி, கால்வாய் பணிகளை போர்கால அடிப்படையில் விரைந்து செயல்படுத்த வேண்டும். கே.ஆர்.பி.டேமிலிருந்து பம்பிங்மூலம் அனைத்து ஏரிகளுக்கும் நீர் பிரப்பவேண்டும்.

உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post *கீரப்பாளையம் ஊராட்சியில் கல்வி கலைத்திருவிழா நடைபெற்றது*
Next post டெஸ்ட் பர்ச்சேஸ் முறையை நிறுத்த கோரி வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோவிந்தராஜுலு தலைமையில் வணிகவரித்துறை இணை ஆணையரிடம் மனு