ரோட்டரி மெடிக்கல் சென்டர் அமைப்பதற்கான மாரத்தான் போட்ட வரும் 27ம்தேதி நடக்கிறது
“ரோட்டரி மெடிக்கல் சென்டர்” அமைப்பதற்கான ரோட்டரி கிளப் ஆஃப் கோவை நடந்தும் மாரத்தான் போட்டி கோவையில் வரும் ஆகஸ்ட் 27ல் நடைபெறவுள்ளது.
கோயம்புத்தூர் மக்களுக்கான சேவைகளில் ரோட்டரி கிளப் ஆஃப் கோவை தொடர்ந்து செய்து வருகின்றது. இயற்கை பாதுகாப்பதற்காக் ‘ஈக்கோ ஸ்டேன்ட்’ மூலம் பலவிதமான செடிகள், மரக்கன்றுகளுடன் கோவையின் பல பகுதிகளில் வைக்கப்பட்டு உள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம்
பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மரக்கன்றுகளை இலவசமாக எடுத்துச் சென்று வளர்த்தி வருகின்றனர்.
மேலும் இந்தியன் மெடிக்கல் அசோசியேசன் கோவை மாவட்டம் சார்பாக பல்வேறு இடங்களில் இரத்ததான முகாம்கள் நடத்தி அதன் மூலம் இரத்தம் சேகரிகத்து தேவைப்படும் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.
அதுமட்டுமல்லாமல், மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் ஆவின் பாலகங்கள் அமைத்துக் கொடுத்தல் உள்ளிட்ட பல சேவைகளை தொடர்ந்து கோவை மக்களுக்காக செய்து வருகின்றது.
தற்போது ரோட்டரி கிளப் ஆப் கோவை சார்பில் மாபெரும் திட்டமாக மேட்டுப்பாளையம் சாலையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக குறைந்த விலை மருந்தகம், மருத்துவ பரிசோதனை லேப், பிஸியோதெரபி, பல் மருத்துவம், பொது மருத்துவர் உள்ளிட்ட சேவைகளை உள்ளடக்கிய குறைந்த விலை மருத்துவ சேவைகளை அளிக்கக்கூடிய “ரோட்டரி மெடிக்கல் சென்டர்” அமைப்பதை குறிக்கோளாக கொண்டுள்ளது.
ரோட்டரி கிளப் ஆஃப் கோவை, இந்த மருத்துவமனை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்கவும், பண உதவி திரட்டவும் வேண்டி ‘அசல் கோவை ரோட்டத்தான்’ என்ற பெயரில் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணி அளவில் வ.உ.சி மைதானத்தில் மாரத்தான் போட்டி நடத்தவிருக்கிறது.
இதற்கான செய்தியாளர் சந்திப்பு கோவை காந்திபுரம் வி கே கே மேனன் சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.
இது குறித்து, ரோட்டரி கிளப் ஆஃப் கோவை நிர்வாகிகள் பேசுகையில், குறைந்த விலை மருத்துவ சேவைகளை அளிக்கக்கூடிய “ரோட்டரி மெடிக்கல் சென்டர்” உருவாக்குவதற்கும் இந்த மருத்துவமனை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்கவும், பண உதவி திரட்டவும் வேண்டி ‘அசல் கோவை ரோட்டத்தான்’ வ.உ.சி மைதானத்தில் நடத்த உள்ளோம்.
இதில், 3கிமீ, 5கிமீ மற்றும் 10 கிமீ தூரங்கள் நடக்கும் இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு டீ சர்ட், மெடல், (E- certificate) மின் சான்றிதழ், மற்றும் காலை உணவு வழங்கப்பட உள்ளது. மேலும் ஒரு லட்சம் மதிப்புள்ள பரிசுகளும் வழங்கப்படவுள்ளது.
3கிமீ மற்றும் 5 கிமீ போட்டிகளுக்கு 500 ரூபாயும், 10 கிமீக்கு 600 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. https://sporfy.com/l/HGbW என்ற இணையத்தின் மூலம் ஆன்லைனின் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் 044-4011-5422 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தனர்.
இந்த செய்தியாளர் சந்திப்பில், ரோட்டரி கிளப் ஆஃப் கோவையின் தலைவர் வி.மஞ்சு, செயலாளர் சதீஷ்குமார், உறுப்பினர் லோகநாதன் மற்றும் அசல் மில்க் ப்ராடக்ட்ஸ் நிறுவனர் சமீர் அஹமது ஆகியோர் கலந்து கொண்டனர்.