மைண்ட்டாக்ஸ் டெக்னோ இன்டியா இரண்டாவது கிளை கோவையில் துவக்கம்

Spread the love

மைண்ட்டாக்ஸ் டெக்னோ இன்டியா இரண்டாவது கிளை கோவையில் துவக்கம்

கோவை ஆக12, மைண்ட்டாக்ஸ் டெக்னோ பிரைவேட் லிமிடெட், இந்தியாவில் தனது விரிவாக்க நடவடிக்கையாக இரண்டாவது கிளையை கோயம்புத்தூரில் துவங்கியது.. இந்த புதிய யுக்தி சார்ந்த விரிவாக்கமானது, கண்டுபிடிப்புகள், வாடிக்கையாளர்களுக்கான சிறப்பு சேவை, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் செமி கண்டக்டர் தொழிற்சாலையில் இந்திய அரசுடன் இணைந்து பங்குதாராக செயலாற்றவும் இப்பகுதியில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்கிறது.
சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செமிகன்டக்டர் உற்பத்தியில், ஒரு தெளிவான தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு வருகிறது மைண்ட்டாக்ஸ். பொறியியல் துறையில் ஒரு புதிய தொழில்நுட்பத்தையும் நவீனத்தையும் புகுத்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டினை மேற்கொண்டு வருகிறது. அடுத்த தலைமுறைக்கான செமிகன்டக்டர்களை உருவாக்கும் முயற்சியினை மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவின் சுய சார்பு தேவைக்காகவும், இந்தியாவிலேயே உருவாக்குவோம் என்ற திட்டத்தினையும் கருத்தில் கொண்டு தொலைநோக்கோடு இந்த நிறுவனம் செயல்படும். கோவையில் உள்ள திறமையான பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பை அளிப்பதோடு, அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட பணிகளையும் வழங்கும். குறிப்பாக கோவை பகுதியில் உள்ள பல்கலைக் கழகங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிகளுடன் பங்குதாராக மாற திட்டமிட்டுள்ளது.
இந்த துவக்க விழாவில் மைண்ட்டாக்ஸ் டெக்னோ தலைமை செயல் அதிகாரி  ஸ்ரீ திருநாவுக்கரசு குறுகையில், “கோவையில் இரண்டாவது கிளையை நாங்கள் இங்கு துவக்குவது ஒரு பரவசமான பயணமாக இருக்கும். இந்திய செமிகன்டக்டர் தொழிலில், சிறந்த பல்கலைக் கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் ஒளிமிகுந்த அறிவுசார்ந்தவர்களுடன் இணைந்து செயல்படுவதில் மிக்க ஆர்வம் கொண்டுள்ளோம். தொழில்நுட்ப மேம்பாடு, செமி கன்டக்டர் தொழில்நுட்பத்தை விரைவுபடுத்தி சர்வதேச அளவிற்கு கருவிகளை அளிக்கவும் நோக்கமாக கொண்டுள்ளோம். கோவையில் எங்களது இரண்டாவது கிளையை துவக்குவதில் மிகுந்த பரவசமடைந்துள்ளோம். இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும், உள்நாட்டு வணிகம், வேலைவாய்ப்பு, புதிய கண்டுபிடிப்புகள் என பல்வேறு வகையில் ஆதரவளிப்போம். இந்திய அரசுடனும் உள்ளுர் சமுதாயத்துடனும் வலுவான பங்குதாராக இருப்போம்,” என்றார்.கோவையில் புதிய கிளையானது, பீளமேடு தண்ணீர்பந்தல் கொடிசியா ரோடு முதல் வீதியில், ஐஸ்வர்யம் அபார்ட்மென்ட் அருகில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ரோட்டரி மெடிக்கல் சென்டர் அமைப்பதற்கான மாரத்தான் போட்ட வரும் 27ம்தேதி நடக்கிறது
Next post திமுக அரசு மத்திய அரசுக்கு துணை போகின்றது? ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஹைதர் அலி குற்றச்சாட்டு