மணிப்பூரில் நடந்து வரும் கலவரத்தை கண்டித்து கோவை எட்டிபடை பேரூராட்சியில் நாம் தமிழர் கட்சியின் ஆர்ப்பாட்டம்‌

Spread the love
மணிப்பூரில் நடந்து வரும் கலவரத்தை கண்டித்து கோவை எட்டிபடை பேரூராட்சியில் நாம் தமிழர் கட்சியின் ஆர்ப்பாட்டம்‌

நாம் தமிழர் கட்சி சார்பில் கிணத்துக்கடவு தொகுதி எட்டிமடை பேரூராட்சியில் மணிப்பூரில் நடக்கும் கலவரங்களை ஒடுக்க தவறிய மத்திய மற்றும் மணிப்பூர் மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மலைவாழ் பழங்குடியின மக்களை கொடூரமாக கொல்வதும், அவர்களை நிர்வாணப்படுத்தி அலங்கோலப்படுத்தியதும் மனித உரிமை மீறல் மற்றும் தேச ஒற்றுமையை சீர்குலைக்கும் செயல் என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
பெண்களை ஒரு பொருட்டாகவே மதிக்காத இந்த தேசம் எப்படி வாழும் வளரும். மதத்தின் அடிப்படையில் மத வெறியாடும் மத்திய மாநில அரசுகளை நாம் தமிழர் கட்சி கடுமையாக கண்டித்தார்கள்.
இந்தக் கலவரங்களுக்கு பொறுப்பேற்று மாண்புமிகு உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கையும் வைக்கப்பட்டது.
இதில் கண்டன உரைகளை
மருத்துவர் சுரேஷ் பொள்ளாச்சி பாராளுமன்ற பொறுப்பாளர், கார்த்திகா மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர், நர்மதா மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர், ஸ்ரீ ராம் மாநில கொள்கை பரப்புச் செயலாளர், பேரறிவாளன் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்,
தினேஷ்குமார் உழவர் பாசறை செயலாளர்,பூலோகம் தொழிற்சங்க பேரவை தலைவர் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.
பேரெழிச்சியாக நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை எட்டிமடை
பேரூராட்சி செயலாளர் கார்த்தி, யுடன் இணைந்து தொகுதி பொறுப்பாளர்கள் அசோக் குமார்,செல்வகுமார்,
கிரண்,இராமகிருஷ்ணன், சதீஸ் ஆகியோர் இணைந்து ஒருங்கிணைத்தார்கள் .
இதில் கோவை மேற்கு மாவட்ட தலைவர் மதுக்கரை ஆனந்தன் செயலாளர் டேனியல் மற்றும் கோவை மண்டல தொழிற்சங்க பேரவை ஒருங்கிணைப்பாளர் கவாஸ்கர் மற்றும் கோவை மண்டலத்தில் உள்ள அனைத்து தொகுதி மாவட்ட பொறுப்பாளர்கள் பாசறை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டார்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post பாஜகவின் தந்திரங்கள் தான் சீமானின் பேச்சு ஆம்பூரில் நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளுர் ஷா நவாஸ் பேட்டி..
Next post ரோட்டரி மெடிக்கல் சென்டர் அமைப்பதற்கான மாரத்தான் போட்ட வரும் 27ம்தேதி நடக்கிறது