உலக மலையாளிகள் பேரவை. கோயமுத்தூர் கிளை, சார்பாக ஜோதிர்ஹமயா ஃபேஸ் 2 கண்தான முகாம் துவக்க விழா கோவையில் நடைபெற்றது…
உலக மலையாளிகள் பேரவை. கோயமுத்தூர் கிளை, சார்பாக ஜோதிர்ஹமயா ஃபேஸ் 2 கண்தான முகாம் துவக்க விழா கோவையில் நடைபெற்றது…
கடந்த 2004 ஆம் ஆண்டு உலக மலையாளிகள் பேரவை சென்னை கிளை சார்பாக ஜோதிர்ஹமயா எனும் கண் தானம் திட்டம் துவங்கப்பட்டு,இதன் வாயிலாக சுமார் மூன்று இலட்சத்திற்கும் அதிகமானோர் கண் தானம் செய்ய பதிவு செய்தனர்..லிம்கா உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்ட ஜோதிர்ஹமயா ஃபேஸ் 2 திட்ட துவக்க விழா கோவையில் நடைபெற்றது… வேர்ல்டு மலையாளி ஃபெடரேஷன் கோவை சாப்டர் மற்றும் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து துவங்கப்பட்டுள்ள இத்திட்டத்தில் பி.எஸ்.ஜி.மருத்துவமனை மற்றும் நலம் அறக்கட்டளையினர் இணைந்து செயல்பட உள்ளனர்.இதன் துவக்க விழா, காந்திபுரம் பகுதியில் உள்ள மலையாளி சமாஜ அரங்கில் நடைபெற்றது..இதில் சிறப்பு விருந்தினராக சங்கரா கண் மருத்துவமனை தலைவர் மருத்துவர் ரமணி கலந்து கொண்டு கண்தான திட்டத்தை துவக்கி வைத்தார்..இந்நிகழ்ச்சியில் உலக மலையாளிகள் பேரவை கோவை கிளை நிர்வாகிகள் ராஜேஷ் குமார்,பத்ம குமார் நாயர்,ராதாகிருஷ்ணன், சசிதரன், ராஜன் ஆறுமுகம்,விஜயன்,அனில் குமார்,சரவணன்,திருமதி வத்சலா வாரியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்..