கோவையில் ஆதார் எண்ணுடன் குற்றவாளிகள் பட்டியல் தயாரித்து கண்காணிப்பு. 

Spread the love

கோவையில் ஆதார் எண்ணுடன் குற்றவாளிகள் பட்டியல் தயாரித்து கண்காணிப்பு.

 

 

கோவை நவம்பர் 28-

 

 

கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் குற்ற வழக்குகளில் கைதாகும் நபர்களின் ஆதார் அட்டை நகல் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 

 

 

குற்றச் செயலில் ஈடுபட்டு கைதானவர்களை ஆஜர்படுத்தும்போது, நீதிமன்றம், அரசு மருத்துவமனை, சிறை வளாகம் என பல இடங்களில் ஆதார் எண் தேவைப்படுகிறது. ஒரு சிலர் ஆதார் எண் விவரங்களை தெரிவிக்க மறுப்பு தெரிவிக்கின்றனர். இதையடுத்து, ஆதார் எண் பெற்று, குற்றவழக்குகளின் அடிப்படையில் தரம் பிரித்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

இது குறித்து காவல்துறையினர் கூறியதாவது: ஆதார் அட்டை இல்லாத சில குற்றவாளிகள் வெளியூர், வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர். இவர்களின் ஆதார் எண்களை தேடி கண்டுபிடிப்பது சிரமமாக உள்ளது. ஆதார் எண் விவரங்களுடன் முதல் தகவல் அறிக்கை தயார் செய்ய வேண்டியுள்ளது.

 

சில குற்றவாளிகள் நீண்ட காலம் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளனர். இதில் ஆதார் எடுக்காதவர்களும் உள்ளனர். வெளியே வந்து பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இவர்களை கைது செய்து சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளும்போது ஆதார் அட்டை இல்லாததால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன.குற்றவாளிகள் தொடர்பான பதிவேடு உள்ளது.

 

 

புதிய குற்றவாளிகள், வெளியூர் குற்றவாளிகள் இந்த பட்டியலில் உள்ளனர். இவர்களில் ஜாமீனில் வந்தவர்கள், சிறையில் உள்ளவர்கள், தலைமறைவாக உள்ளவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post செகன்ராபாத்-கொல்லம் இடையே கோவை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம்
Next post உலக மலையாளிகள் பேரவை. கோயமுத்தூர் கிளை, சார்பாக ஜோதிர்ஹமயா ஃபேஸ் 2 கண்தான முகாம் துவக்க விழா கோவையில் நடைபெற்றது…