கோவையில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு 154 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைப்பு.
கோவையில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு 154 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைப்பு.
கோவை நவம்பர் 28-
தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்தது. இதுதொடர்பாக மின்நுகர்வோரின் செல்போன் எண்ணுக்கும் மின்வாரியம் குறுஞ்செய்தி அனுப்பியது. கோவை மாவட்டத்தில் மொத்தம் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. அரசு, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்தியை தொடர்ந்து பலரும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக இன்று முதல் அடுத்த மாதம் 31-ந் தேதி வரை வரை தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடக்கிறது.

அதன்படி கோவை மாவட்டத்தில் உதவி பொறியாளர் அலுவ–லகங்களில் 154 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது. இந்த அலுவலகங்களில் இதற்காக தனி கவுண்டர்கள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த முகாம் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை செயல்படும். இன்று கோவையில் உள்ள அனைத்து முகாம்களிலும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக காலை முதலே ஏராளமான வாடிக்கயைாளர்கள் திரண்டிருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, உரிய ஆவணங்களை கொடுத்து மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்து கொண்டனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
மின் நுகர்வோர் தங்களது விவரங்களை புதுப்பிக்கும் வகையிலேயே மின் இணைப்பு எண்ணு டன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக கோவையில் 154 இடங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த முகாம்களில் தனி கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டு ஒரு ஊழியர் பணியில் உள்ளனர். பொதுமக்கள் ஆதார் அட்டை, மின்கட்டண அட்டை, செல்போன் ஆகியவற்றை எடுத்து கொண்டு முகாம்களுக்கு நேரில் செல்ல வேண்டும். அங்கு மின் இணைப்புடன் ஆதார் எண்ணை பதிவு செய்து, செல்போனுக்கு வரும் ஒ.டி.பியை பதிவு செய்தால் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு விடும்.
வாடிக்கையாளர்களின் செல்போனுக்கும் குறுஞ்செய்தி வரும். கோவை மாவட்டத்தில் தற்போது வரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். தொடர்ந்து மக்கள் சிறப்பு முகாம்களில் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.