கோவையில் 2 இளம் பெண்கள் தற்கொலை. 

Spread the love

கோவையில் 2 இளம் பெண்கள் தற்கொலை.

 

 

கோவை நவம்பர் 28-

 

 

கோவை இடிகரை அருகே உள்ள மணியக்கார ம்பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன். கூலித் தொழிலாளி. இவரது மனைவி இந்துஜா (வயது 38). இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர். இந்துஜாவுக்கும் அவரது மாமியாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

 

 

 

இதனை அவரது கணவர் சமாதானம் செய்து விட்டு வேலைக்கு சென்றார். வீட்டில் இருந்த இந்துஜா வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலைசெய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பெரிய நாயக்கன் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

 

 

 

உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

 

 

பின்னர் தற்கொலை செய்து கொண்ட இந்துஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பொள்ளாச்சி அருகே உள்ள கணக்கம்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ்குமார்.

 

 

 

இவரது மனைவி சரஸ்வதி (35). இவர்களுக்கு கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சரஸ்வதி தனியாக வசித்து வந்தார். சம்பவத்தன்று மனவேதனை அடைந்து காணப்பட்ட அவர் திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்த அந்த பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

 

 

 

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட சரஸ்வதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்னூரில் விவசாயிகள் உண்ணாவிரதம் மற்றும் கடையடைப்பு போராட்டம்.
Next post கோவையில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு 154 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைப்பு.