இழந்த 2 லட்சத்து 8, மீட்டுக் கொடுத்த கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார்,
இழந்த 2 லட்சத்து 8, மீட்டுக் கொடுத்த கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார்,
கோவை நவம்பர் 28-
மோசடி பேர்வழிகளால் பறிக்கப்பட்ட, 2 லட்சத்து, 8 ஆயிரம் ரூபாய், கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசாரின் முயற்சியால் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.கோவை மாவட்டத்தில் வடவள்ளி, பொள்ளாச்சி, சூலுார், அன்னுாரை சேர்ந்தவர்கள், ஓ.டி.பி.,யை ஆன்லைனில் தெரியப்படுத்தியதன் வாயிலாக பணம் இழந்து விட்டதாக, மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
சைபர் கிரைம் போலீசார் துரிதமாக செயல்பட்டு, 2 லட்சத்து, 8 ஆயிரம் ரூபாயை மீட்டனர்.
அப்பணம், அதன் உரிமையாளர்களின் வங்கி கணக்கில் திரும்ப வரவு வைக்கப்பட்டது. பணம் மீட்கப்பட்டதற்கான சான்றிதழை, பாதிக்கப்பட்டவர்களுக்கு, எஸ்.பி., நேற்று வழங்கினார்.எஸ்.பி., பத்ரிநாராயணன் கூறுகையில், ”ஆன்லைனில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டலாம் என்று வரும் விளம்பரங்களை நம்பக்கூடாது.
இணையதளங்களில் ஏதேனும் பணத்தை இழந்து விட்டால், உடனடியாக, ‘1930’ என்ற தொடர்பு எண்ணில் புகார் தெரிவிக்க வேண்டும். சைபர் கிரைம் தொடர்பான புகார்களுக்கு,www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்தால், போலீசார் உங்களை தொடர்பு கொண்டு மேல் நடவடிக்கை எடுப்பர்,”