செகன்ராபாத்-கொல்லம் இடையே கோவை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம்

Spread the love

செகன்ராபாத்-கொல்லம் இடையே கோவை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம்.

 

 

கோவை நவம்பர் 28-

 

 

பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், செகந்திராபாத்-கொல்லம் இடையே கோவை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

இதுதொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சபரிமலை சீசனை முன்னிட்டு செகந்திராபாத்-கொல்லம் இடையிலான சிறப்பு ரயில் (எண்:07117), வரும் டிசம்பர் 4,18, 2023 ஜனவரி 8 ஆகிய தேதிகளில், செகந்திராபாத்திலிருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 11 மணிக்கு கொல்லம் சென்றடையும். இதேபோல, கொல்லம்-செகந்திராபாத்- இடையிலான சிறப்பு ரயில் (எண்:07118), வரும் டிசம்பர் 6,20, 2023 ஜனவரி 10 ஆகிய தேதிகளில், கொல்லத்திலிருந்து அதிகாலை 2.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.05 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.

 

 

 

இதேபோல, செகந்திராபாத்-கொல்லம் இடையிலான சிறப்பு ரயில் (எண்:07121) வரும் டிசம்பர் 11, 25, 2023 ஜனவரி 1,15 ஆகிய தேதிகளில், செகந்திராபாத்திலிருந்து மதியம் 2.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 11 மணிக்கு கொல்லம் சென்றடையும். இதேபோல, கொல்லம்-செகந்திராபாத்- இடையிலான சிறப்பு ரயில் (எண்: 07122) வரும் 29, டிசம்பர் 13,27, 2023 ஜனவரி 3,17 ஆகிய தேதிகளில் கொல்லத்திலிருந்து அதிகாலை 2.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.

 

 

 

 

மேலும், செகந்திராபாத்-கொல்லம் இடையிலான சிறப்பு ரயில் (எண்:07123), இன்று (நவ.28) மதியம் 2.30 மணிக்கு செகந்திராபாத்திலிருந்து புறப்பட்டு, நாளை இரவு 11.50 மணிக்கு கொல்லம் சென்றடையும். கொல்லம்-செகந்திராபாத் இடையிலான சிறப்பு ரயில் (எண்:07124), கொல்லத்திலிருந்து வரும் 30-ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும். செல்லும் வழியில் இந்த ரயில்கள் சாஸ்தான்கோட்டா, காயன்குளம், மாவேலிக்கரா, செங்கனூர், திருவல்லா, செங்கனாச்சேரி, கோட்டயம், எர்ணாகுளம் நகரம், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு,

 

 

 

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா உள்ளிட்ட ரயில்நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post இழந்த 2 லட்சத்து 8, மீட்டுக் கொடுத்த கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார்,
Next post கோவையில் ஆதார் எண்ணுடன் குற்றவாளிகள் பட்டியல் தயாரித்து கண்காணிப்பு.