பட்டாசு தொழிலாளர்கள் உயிரை காக்க மனித உரிமைகள் ஆணையத்திற்கு தலித் ஜெயராஜ் கோரிக்கை
பட்டாசு தொழிலாளர்கள் உயிரை காக்க மனித உரிமைகள் ஆணையத்திற்கு தலித் ஜெயராஜ் கோரிக்கை
கோவை நவ 21, டாக்டர் அம்பேத்கர் எஸ்.சி/எஸ்.டி அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் நல சங்கத்தின் நிறுவனத்தலைவர் தலித் ஜெயராஜ் மனித உரிமைகள் ஆணையத்திற்கு பட்டாசு ஆலையில் பணி நேரத்தில் உயிர் இழக்கும் தொழிலாளர்கள் நலன் காத்திட வேண்டும் என கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். அதன் விபரம் வருமாறு:-
தமிழகத்தில் பாரம்பாரிய தொழிலாக பட்டாசு உற்பத்தி நடைபெற்று வருகின்றது. குறிப்பாக சிவகாசி மாவட்டத்தில் பட்டாசு தொழில் குடிசை தொழிலாக செய்து வருகின்றனர். வாழ்வாதத்திற்காக இப்படி நடைபெறும் பட்டாசு தொழிற்சாலைகளில் அடிக்கடி வெடி விபத்தில் உயிர் இழப்பது வாடிக்கையாகி வருகின்றது.இதனை ஒரு நாள் செய்தியாகவும்,அரசு நிவாரணம் வழங்குவதும் அடிக்கடி நடக்கும் நிகழ்வாகவே இருந்து வருகின்றது. இவ்வாறு உயிர் இழக்கும் குடும்பங்களை நிலை மிகவும் வறுமை கோட்டிற்கு கீழ் வடிவருகின்றது. ஆகவே இப்படி வெடி விபத்தில் உயிர் இழந்த குடும்பங்களுக்கு இதுவரை கிடைக்காமல் நிலுவையில் அரசு நலத்திட்ட உதவிகளையும்,இழப்பீடு தொகை உடனடியாக வழங்குவதுடன்,இத்தொழிலில் உள்ள தொழிலாளர்களை விடுவிப்பதுடன்,அவர்களை மாற்று தொழிலில் ஈடுபடுத்த வேண்டும் என மனித உரிமைகள் ஆணையத்த்திற்கு டாக்டர் அம்பேத்கர் அரசு மற்றும் பொதுத்துறை எஸ்.சி/எஸ்.டி ஊழியர்கள் நலச்சங்கத்தின் நிறுவனத்தலைவர் தலித் ஜெயராஜ் தனது கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் பட்டாசு தொழிலையும்,தொழிலாளார் நலனை காத்திட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் தமிழக முதல்வருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும்,நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என தலித் ஜெயராஜ் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.