பொள்ளாச்சியில் மதம் பிடித்த யானை தாக்கி பாகன் காயம்,

Spread the love

பொள்ளாச்சியில் மதம் பிடித்த யானை தாக்கி பாகன் காயம்,

கோவை நவம்பர் 19-

 

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, மதம் பிடித்த வளர்ப்பு யானை தாக்கியதில், பாகன் படுகாயமடைந்தார்.ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, பொள்ளாச்சி அருகே, டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில், 22 யானைகள் வனத்துறையால் பராமரிக்கப்படுகின்றன.

 

இந்நிலையில், 33 வயதான ‘சுயம்பு’ என்ற யானையை, பாகன் பிரசாந்த்,43, பராமரித்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல மேய்ச்சலுக்கு அழைத்துச்சென்று மாலையில் முகாமுக்கு அழைத்து வந்தார். அப்போது, திடீரென யானைக்கு மதம் பிடித்து பாகன் பிரசாந்தை அருகே உள்ள பள்ளத்தில் துாக்கி வீசியது.

 

பள்ளத்தில் இருந்து அவர் சப்தம் போட்டுள்ளார். அருகே உள்ள பாகன்கள், பழங்குடியின மக்கள், படுகாயமடைந்த பிரசாந்தை மீட்டு அம்பராம்பாளையம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.டாப்சிலிப் வனச்சரகர் சுந்தரவேல் மற்றும் வனத்துறை அதிகாரிகள், சிகிச்சை பெறும் பாகனை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post மாநகரில் 387 ஆயுதப்படை காவலர்கள் திடீர் மாற்றம்.
Next post பட்டாசு தொழிலாளர்கள் உயிரை காக்க மனித உரிமைகள் ஆணையத்திற்கு தலித் ஜெயராஜ் கோரிக்கை