ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்கு வந்து மாயமான பெண் சுபஸ்ரீ கிணற்றில் சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளார்

Spread the love

ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்கு வந்து மாயமான பெண் சுபஸ்ரீ கிணற்றில் சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளார்.

 

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பழனிகுமார். இவரது மனைவி சுபஸ்ரீ. கடந்த மாதம் 11ஆம் தேதி கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்காக வந்த சுபஸ்ரீ யை 18ம் தேதி அழைத்து செல்ல அவரது கணவர் வந்த பொழுது சுபஸ்ரீ ஈஷாவில் இருந்து மாயமானது தெரிய வந்தது. பின்னர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் சுபஸ்ரீ சாலையோரம் ஓடி செல்வது பதிவாகி இருந்தது. இது குறித்து பழனிக்குமார் ஆலாந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை அடுத்து 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் சுபஸ்ரீ யை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று செம்மேடு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது தோட்டத்தில் இருக்கும் கிணற்றில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மிதப்பதாக ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

 

தகவலை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கிணற்றிலிருந்து பெண்ணின் சடலத்தை மீட்டெடுத்த பொழுது அவர் சுபஸ்ரீ யாக இருக்க கூடும் சந்தேகம் எழுந்த நிலையில் பழனிகுமாருக்கு தகவல் அளிக்கப்பட்டு அங்கு வந்த பழனிக்குமார் சுபஸ்ரீ தான் என்பதை உறுதி செய்துள்ளார். இதனையடுத்து சுபஸ்ரீ யின் உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

 

ஈஷா யோகா மையத்திலிருந்து மாயமான பெண் கிணற்றில் சடலமாக மீட்டெடுக்கபட்டுள்ள நிலையில் போலீசார் இது குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post கோவை நகரில் டிசம்பர் 10 மற்றும் 11-ம் தேதி ஆகிய இரு தினங்கள் மிகப்பெரிய கிறிஸ்துமஸ் திருவிழா
Next post உலக ஈரநில தினநாளை முன்னிட்டு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அரசு பள்ளி மாணவர்களுடன் இணைந்து வனத்துறை சார்பில் தூய்மை பணி