உலக ஈரநில தினநாளை முன்னிட்டு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அரசு பள்ளி மாணவர்களுடன் இணைந்து வனத்துறை சார்பில் தூய்மை பணி

Spread the love

உலக ஈரநில தினநாளை முன்னிட்டு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அரசு பள்ளி மாணவர்களுடன் இணைந்து வனத்துறை சார்பில் தூய்மை பணி

 

பென்னாகரம்,

உலக ஈர தின நாளை முன்னிட்டு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அரசு பள்ளி சுற்றுச்சூழல் கழக மாணவர்களுடன் இணைந்து வனத்துறை சார்பில் தூய்மை பணி நடைபெற்றது

தர்மபுரி மாவட்டம்பென்னாகரம் வன சரகம் சார்பில் பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சூழல் கழக மாணவர்களுடன் இணைந்து உலக ஈரநில தின நாளை முன்னிட்டு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.இந்த நிகழ்ச்சி பென்னாகரம் வன சரக அலுவலர் முருகன்மற்றும் சுற்றுச்சூழல் கழக ஆசிரியர் கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் கழக அமைப்பை சார்ந்த மாணவர்கள் வனத்துறையுடன் இணைந்து ஒகேனக்கல் காவிரி ஆற்றோரங்களில் பொதுமக்கள் வீசி சென்ற பிளாஸ்டிக் பொருள்களை அப்புறப் படுத்தினர். மேலும் பொது மக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர்.

அதேபோல் ஒகேனக்கல் வனசரகம் சார்பில் ஆலம்பாடி காவிரி ஆற்றங்கரையில் ஒகேனக்கல் வனசரக அலுவலர் ராஜ்குமார் மற்றும் ஊட்டமலை தலைமை ஆசிரியர் பாலாஜி ஆகியோர் தலைமையில் பள்ளி மாணவர்கள் மற்றும் சாரண சாரணிய மாணவர்களைக் கொண்டு காவிரி ஆற்றங்கரை ஓரங்களில் தூய்மை மற்றும் விழிப்புணர்வு பணி மேற்கொள்ளப்பட்டது இந்த நிகழ்ச்சியில் வன குழு தலைவர் குமார், வனவர் செல்லமுத்து, சக்திவேல், புகழேந்தி ஆசிரியர் கருணாமூர்த்தி மற்றும் மாணவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்கு வந்து மாயமான பெண் சுபஸ்ரீ கிணற்றில் சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளார்
Next post பழமை வாய்ந்த கோவில் இடிப்பு, இந்து முன்னணியினர் கண்டனம்..