தாராபுரம் தூய்மை பணியாளர்களுக்கு தாகம் தீர்த்த சமூக சேவகர் சிவசங்கர்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இரு மாதங்களாக உலக அளவில் நாளுக்கு நாள் காலம் மாற்றங்கள் காரணமாக வெப்பம் 100 டிகிரி தாண்டி அடித்துக் கொண்டிருக்கும் வேளையில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் தன் தேவைக்காக மட்டும் வெளியே வந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் தாராபுரம் மக்களின் நலனுக்காகவும் தான் உடலையும் உயிரையும் பொருட்படுத்தாமல் மழை பணி வெயில் என்று தன் உடலை வருத்திக் கொண்டு பொதுமக்களின் சேவையை எங்களோட தேவை என்று எண்ணி ஒவ்வொரு நாளும் இரவும் பகலும் தூய்மை பணியாளர்கள் தாராபுரம் நகரத்தை சுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள் அந்த வேலையில் வெப்பம் தாக்கத்தால் மோர் அருந்தலாம் என்று பொள்ளாச்சி சாலையில் உள்ள ஒரு தேனீர் கடைக்குள் நுழைந்தார் சமூக ஆர்வலர் சிவசங்கர் அப்பொழுது அதே சாலையில் வயது முதிர் நிலையிலும் வெயிலில் தூய்மை பணி செய்து கொண்டிருந்த பெண்களை பார்த்தவுடன் அவர்களுக்கு சிறிது தாகம் தீர்க்க வேண்டும் என்று நினைத்த சமூக ஆர்வலர் கே வி சிவசங்கர் கடையிலிருந்து குளிர்பானங்களை வாங்கி கொடுத்து அவர்கள் மனதை வெப்பத்திலிருந்து குளிர்ச்சியை ஏற்படுத்தினார் மற்றும் அவர்களுடன் உரையாடும் பொழுது வெப்பம் அதிகரித்து இருப்பதால் நீர் அதிகமாக அருந்துங்கள் அதிக வெயிலில் வேலை செய்து உடலை வருத்தி கொள்ளாதீர்கள் இல்லையென்றால் வேலை காலை நேரங்களிலே செய்து முடித்துக் கொள்ளுங்கள் இல்லை மாலை நேரங்களில் செய்யுங்கள் உங்களில் ஆரோக்கியம் மிகவும் உங்கள் குடும்பத்திற்கும் இந்த ஊருக்கு முக்கியம் என்று கூறி விடை பெற்று சென்றார் தூய்மை பணியாளர்கள் அவரை வாழ்த்தினர்