தூய்மை பணியாளர்களுக்கு பயிற்சி நிறைவு சான்றுதல் வழங்கும் விழா நேர்டு தொண்டு நிறுவனத்தின் தலைவர் காமராஜ் தலைமையில் நடந்தது
தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அட்டை, பயிற்சி நிறைவு சான்றுதல், பாதுகாப்பு உபகரணம் வழங்கும் விழா நேர்டு தொண்டு நிறுவனத்தின் தலைவர் காமராஜ் வழங்கினார்.
கோவை செப் 10, பொதுமக்கள் தினமும் பயண்படுத்தி தூக்கி எரியும் குப்பைகளில் இருந்து, பணம் சம்பாதிக்கும் முறையை கோவை வடவள்ளி பகுதியில், நேர்டு தொண்டு நிறுவனம் தூய்மை பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தது.இப்பயிற்சி வகுப்பில் பயிற்ச்சி நிறைவு செய்த தூய்மை பணியாளர்களுக்கு மத்திய அரசின் பயிற்சி நிறைவு சான்றிதழ் வழங்கும் விழா, கோவை வடவள்ளி பகுதியில் உள்ள மாநகராட்சி சமூதாய கூடத்தில் நடைபெற்றது, நேர்டு தொண்டு நிறுவனம் மற்றும் கோவை மாநகராட்சி இணைந்து, தூய்மை பணியாளர் களுக்கான பயிற்சி நிறைவு சான்றுதல் வழங்கும் விழா, தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் விழா மற்றும் கடன் உதவி தொகை வழங்கும் விழா, நலவாரிய அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கோவை மாநகராட்சியின் துணை ஆணையர் சிவக்குமார் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு சான்றிதழ்களையும், தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அட்டைகளையும் வழங்கினார், மேலும் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நேர்டு தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் காமராஜ் கூறும் பொழுது..
கோவையில் கடந்த 40 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்ற நேர்டு தொண்டு நிறுவனம், மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் என்ற அமைச்சகத்தின் கீழ், தேசிய துப்புரவு நதி மேம்பாட்டு நிறுவனம் சார்பில், 5 நாட்கள், தொழில் பயிற்சியை கோவை மாநகராட்சியில் பணியாற்றும் 100 சுகாதார பணியாளர்களுக்கு ஆரம்பிக்க பட்டது, இந்த 5 நாட்கள் நடைபெற்ற திறன் மேம்பாட்டு பயிற்சியானது, தற்போது மாநகராட்சியில் தற்காலிக, அல்லது ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றும், பணியாளர்களுக்கு குப்பைகள் மூலமாக, அவர்கள் சொந்தமாக தொழில் செய்யும் வகையில் மத்திய,மாநில அரசுகள், மானியத்துடன் கடனுதவி அளிக்க உள்ளது, இதில் குப்பைகளில் இருந்து எரிவாயு தயாரிப்பது, மின்சாரம் தயாரிப்பது, எரிவாயுகளை உற்பத்தி செய்து இருசக்கர வாகனங்கள், பேருந்து, லாரிகளுக்கு தேவையான எரிபொருளாக மாற்றுவது, குறித்து பயிற்சி அளிக்க பட்டது, இதற்கு மத்திய அரசு 10 கோடி வரை கடனுதவி அளித்துள்ளது, மேலும் செப்டிக் டேங்க் உயிரிழப்புகளை முற்றிலும் தடுக்க வேண்டும் என்பதை இந்த பயிற்சியின் மூலம் தூய்மை பணியாளர்களுக்கு தெரிவிக்க பட்டது, இனி வரும் காலங்களில் இயந்திரங்களை கொண்டு மட்டுமே குப்பைகளை கையாள முடியும் எனவே, இயந்திரங்களை வாங்க எளிதில் கடனுதவி பெற்று இதனை பெற முடியும் என்றார், இந்த பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு காப்பீட்டு திட்டம் போட பட்டுள்ளது, என தெரிவுத்தார், இந்த நிகழ்ச்சியில் 90 நபர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கபட்டது. இந்த நிகழ்வில், மேற்கு மண்டல உதவி ஆணையர் சந்தியா, 40 வது வார்டு கவுன்சிலர் பத்மாவதி, நேர்டு தொண்டு நிறுவனத்தின் தலைவி சக்திஷ்வரி காமராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.