சென்னை வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்டம் தோறும் 1000 மரக் கன்றுகள் நடும் தொடக்க விழா.

Spread the love

சென்னை வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்டம் தோறும் 1000 மரக் கன்றுகள் நடும் தொடக்க விழா.

சென்னை செப் 10,
முத்தமிழ் அறிஞர்,முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கழக சுற்றுச்சூழல் அணியின் சார்பில் மாவட்டம் தோறும் 1000 மரக் கன்றுகள் நடும் விழா நடுவது என திட்டமிடப்பட்டது. கழக சுற்றுச்சூழல் அணி செயலாளரும்,அயலக வாழ் தமிழர்கள் நல வாரிய தலைவருமான கார்த்திகேய சிவசேனாபதி,மாநில துணை செயலாளர் பழ செல்வகுமார் ஆகியோர் வழிகாட்டி படி இன்று சென்னை வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் லயன்.தீனதயாளன் தலைமையில் மரக்கன்று நடும் தொடக்க விழா நடைபெற்றது.

கலைஞர் நூற்றாண்டு மாவட்டம் தோறும் 1000மரக்கன்றுகள் நடும் தொடக்கவிழா ராயபுரம் சிஎஸ்ஐ நார்த்விக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர், சென்னை மாநகராட்சி நகரமைப்பு குழு தலைவர் இளைய அருணா,கழக சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர்,சென்னை திருவள்ளூர் மண்டல பொறுப்பாளருமான பழ.செல்வக்குமார்,கழக சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு இவ்விழாவை துவக்கி வைத்து மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இந்த விழாவில் இராயபுரம் பகுதி கழக செயலாளர்கள் சுற்றுச்சூழல் அணி சென்னை மாவட்ட துணை அமைப்பாளர் மற்றும் சென்னை திருவள்ளூர் மாவட்ட சுற்றுச்சூழல் அணி நிர்வாகிகள்,இதர அணி நிர்வாகிகள்,வட்ட கழக நிர்வாகிகள்,கழக உடன்பிறப்புகள் பொதுமக்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post தூய்மை பணியாளர்களுக்கு பயிற்சி நிறைவு சான்றுதல் வழங்கும் விழா நேர்டு தொண்டு நிறுவனத்தின் தலைவர் காமராஜ் தலைமையில் நடந்தது
Next post பழனி அரசு மருத்துவமனையில் தற்கொலைகளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி..