திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் திருப்பத்தூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத் துறை சார்பில் என் கல்லூரி கனவு உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் திருப்பத்தூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத் துறை சார்பில் என் கல்லூரி கனவு உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பத்தூர் டிச 26,
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் திருப்பத்தூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் என் கல்லூரி கனவு 2024 ஆம் ஆண்டு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பத்தாம் வகுப்பு முடித்த பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
அப்போது மாணவ மாணவிகளிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ்
10 ஆண்டுகளுக்கு முன்பு கிராம புறத்தில் இருந்து வருகிற மாணவ மாணவிகளுக்கு எந்த வித வழிகாட்டலும் இருந்ததில்லை
அரசு எடுக்கின்ற அளப்பரிய ஒரு உத்வேகத்தை முன்னெடுப்பை நாங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற ஒரு உறுதியை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் வீட்டில் நம்முடைய பெற்றோர்களும்,
பெரியவர்களும், டாக்டராக வேண்டும் கலெக்டர் ஆக வேண்டும் என தங்களுக்குரிய விருப்பங்களை கூறலாம் ஆனால் நீங்கள் ஒரு நிபுணர்களை வைத்து அறிவுரைகளை பெற்றால் நீங்கள் நினைக்கும் இலக்குகளை அடையலாம் என பேசினார்.
இந்த நிகழ்வில் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் கதிர் சங்கர், பழங்குடியினர் நல சங்கத் திட்ட அலுவலர் செந்தில்குமார் மற்றும் துறைச் சார்ந்த அதிகாரிகள் மற்றும் மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.