தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு 144 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்

Spread the love

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர திமுக சார்பில் நகர கழக செயலாளர் வி. எஸ்.சாரதி குமார் தலைமையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு மார்ச் மாதம் முழுவதும் அரசு மருத்துவமனையில் பிறந்த 144 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் உபகரங்களை அமைச்சராக எ.வ.வேலு வழங்கினார்.

 

நிகழ்ச்சியில் திருப்பத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, மாவட்ட செயலாளரும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே.ஆர். சூரியகுமார்,நகர மன்ற தலைவர் உமா சிவாஜி கணேசன் உட்பட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post தாராபுரத்தில் பூரண மதுவிலக்கு அமுல்படுத்த வேண்டி இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Next post வேலூர் மாவட்ட எஸ்பியாக மணிவண்ணன் பொறுப்பேற்பு